
மூலிகை மூலம் பெட்ரோல் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்து கூறியவர் ராமர் பிள்ளை.
ராமர் பிள்ளை ‘மூலிகை பெட்ரோல்’ கண்டுபிடிப்பை அடிப்படையாக வைத்து தமிழில் ஒரு வெப் சீரிஸ் உருவாகியுள்ளது.
‘திரவம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இதில், பிரசன்னா ராமர் பிள்ளை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த கதாபாத்திரத்துக்கு ரவி பிரகாசம் எனப் பெயர் வைத்துள்ளனர்.
மூலிகை பெட்ரோலை ஒருவர் எப்படி கண்டுபிடிக்கிறார். அவரிடமிருந்து அந்த ஃபார்முலாவை அபகரிக்க என்னவெல்லாம் செய்கிறார்கள், அதிலிருந்து அவர் எப்படி தப்பித்தார் என்பதை த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கிறார்கள்.
வருகிற 21-ம் தேதி முதல் ஜீ5 இணையதளத்தில் இந்த வெப் சீரிஸ் ஒளிபரப்பாக இருக்கிறது.
Patrikai.com official YouTube Channel