திண்டுக்கல்: இந்த ஆட்சி எவ்வளவு அசிங்கமாக போய்க்கொண்டிருக்கிறது, எவ்வளவு கேவலமாக நடைபெறுகிறது என்பது குறித்து சிந்தியுங்கள் என பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக சார்பில் திண்டுக்கல்லில்மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினமாக அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, தொடக்கத்தில் அதிமுக அரசை புகழ்ந்து பேசினார். தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 தரக்கூடாது என்று நீதிமன்றத்தில் திமுகவினர் தடை உத்தரவு கேட்டனால், ஆனால் நீதிமன்றம் தலையிட மறுத்ததால், நாமெல்லாம் மகிழ்ச்சியாக பொங்கல் பரிசு ரூ.2500ஐ பெற முடிந்தது என்றவர், தயவு செய்து இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்று பாருங்கள்; எவ்வளவு அசிங்கமாக போய்க்கிட்டு இருக்கிறது என்று சிந்தியுங்கள் என உளறினார். இது அதிமுக நிர்வாகிகள் மட்டுமின்றி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தான் அமைச்சராக உள்ள அரசையே, தரம் குறைந்த வார்ததைகளால் அமைச்சர் உளறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு இதுபோன்ற உளறல் ஒன்றும் புதிது அல்ல. ஏற்கனவே , ஜெயலலிதா மருத்துவமனையில் இட்லி சாப்பிட்டதாக பொய் சொன்னோம் என்றதுடன், ஜெ., போல் எங்களுக்கு துணிச்சல் இல்லாததால் பாஜ.வுக்கு ஆதரவு கொடுக்கிறோம் என்று உளறினார். அதுபோல, எம்ஜிஆரின் 101வது பிறந்தநாள் கூட்டத்தின்போது, ஜெ.வை திட்டியதால்தான் விஜயகாந்துக்கு பேச முடியவில்லை என்று விமர்சித்ததுடன், அம்மா கொள்ளையடித்த பணத்தை டிடிவி திருடிவிட்டதாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, அதிகமான மக்கள் படித்ததால்தான் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்று புதிய வியாக்கியனம் பேசியதுடன், தற்போது தனது கட்சியின் ஆட்சி குறித்தே உளறி கொட்டியிருப்பது கடும் விமர்சனத்துக்குள்ளது.
சமுக வலைதளங்களில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு குறித்து நெட்டிசன்கள் கடுமையாக கலாய்த்து வருகின்றனர்.