ஊரடங்கால் உங்களுக்கு எல்லாம் மறந்து போச்சா?  முதல்ல இத படிங்க….


சோம்பேறித்தனம்

“மனுசனோட மனப்போக்கு எப்போதுமே வித்தியாசமானது.  இயல்பான வாழ்க்கை முறை சற்றே மாறுதுன்னா, தனது வழக்கமான பணிகளை பின்பற்றாமல் சோம்பி திரிதல் மனுசனுக்கு மிகவும் பிடிச்ச விசயம்.  உதாரணமாக, நீங்க ஒரு கோடை விடுமுறையில் இருக்கீங்கன்னா, கண்ட நேரத்திலும் சாப்பிட்டுட்டு நினைச்ச நேரம் தூங்கிட்டு இருப்பீங்க.  உங்க வழக்கமான நேர அட்டவணையை சத்தியமா கடைபிடிக்க மாட்டீங்க.  அதே மாதிரியான ஒரு நிகழ்வு தான் இந்த ஊரடங்கு காலத்தில் உங்களுக்கு ஏற்படும்.  உங்களோட ரெகுலர் சாப்பாட்டு டைம், தூங்குற டைம் எல்லாமே மாறியிருக்கும்.  இன்னிக்கி என்ன கிழமை, என்ன தேதி என்பதே சரியா தெரியாமல் போயிருக்கும்.  இன்னும் சொல்லப்போனால் எத்தனை மணிங்கிறே தெரியாமல் போயிடற ஒரு விசித்திரமான நிலையில் இருப்பீங்க ” என்கிறார் மனநல மருத்துவர் டாக்டர் கவிதா ருங்கட்டா.

நாம இப்போ கிட்டத்தட்ட ஊரடங்கின் கடைசி நாட்களில் இருக்கோம்.  இந்த நிலையில் நாம எங்கே இருக்கும், என்ன பண்றோம்ங்கிற ஒரு ஸ்திரமான சிந்தனையே இல்லாத நிலையில் இருக்கோம்.  திங்கள்கிழமை, ஞாயிறு போல தோன்றுவதும், செவ்வாய்க் கிழமைகள், வெள்ளிக்கிழமை போல உணரப்படுவதும் தவிர்க்க முடியாத விசயமாகி விட்டது.

வார நாட்கள் எவை, வார இறுதி நாட்கள் எவை என்றே பிரித்து உணர்ந்து கொள்ள முடியாத ஒரு குழப்பமான சறுக்கல் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  இவை எல்லாமே ஒரு கனவில் வலம் வருவது போன்ற மனநிலையில் நம்மை வைத்திருக்கிறது.  விடியற்காலை நான்கு மணிவரை – அது விடியற்காலை என்பதையே மறந்து – விழித்திருப்பதும், டின்னர், பிரேக்ஃபாஸ்ட் போல உணரப்படுவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

இவற்றிலிருந்து மீளுவது எப்படி…? இதனை நிறுத்திவிட்டு நமது வழக்கமான நடைமுறை வாழ்க்கைக்கு வருவதெப்படி?

1. வழக்கத்தை உருவாக்குங்கள்.  ஒரு காலண்டருடன் அமர்ந்து ஒவ்வொன்றாகக் குறிப்பெடுங்கள்.  எத்தனை மணிநேரம் வேலை செய்றீங்க,  எப்ப உடற்பயிற்சி செய்றீங்க, எவ்வளவு நேரம் குடும்பத்துடன் செலவழிக்கிறீங்கங்கிறது மாதிரியான நிஜமான தரவுகளை குறிப்பெடுங்கள்.  அதே போல நீங்கள் சாப்பிடும் நேரம், தூங்கும் நேரம் போன்றவற்றையும் தான்

2. அதிகப்படியான உழைப்பு, தூக்கம், உடற்பயிற்சி இவற்றைத் தவிருங்கள்.  உங்கள் போனில் அலாரம் வைத்து அந்தந்த நேரங்களில் சாப்பிடுவது, தூங்குவது என்று வழக்கப்படுத்துங்கள்.

3. சமூக வலைத்தளங்களிலிருந்து விடுபட்டுத் தனித்திருந்து சிந்திப்பது உங்களின் தினத்தினை மிகவும் உபயோகமுள்ளதாக ஆக்கும்.  அத்துடன் இது நேரங்கழித்து தூங்குவது மற்றும் அவசியமின்றி தூக்கத்தினை இழப்பது போன்றவற்றைத் தவிர்க்க உதவும்.

4.  வார இறுதி நாட்களை குடும்பத்துடன் கேளிக்கையான விசயங்களுடன் கொண்டாடத் தவறாதீர்கள்.  “லீவு தான… என்ன இப்போ…” என்பது மாதிரியான சோம்பேறித்தனத்தை முற்றிலும் தூக்கி எறிய முயற்சி எடுங்கள்.

மேலே சொன்னவைகள் எல்லாமே மனநல மருத்துவர் டாக்டர் கவிதா ருங்கட்டா மற்றும் வாழ்வியல் நிபுணர் திரு. சியாம் சுந்தர் ஆகியோரின் அதி முக்கியமான அறிவுரைகள்.

இவற்றை முறையாகப் பின்பற்றி இந்த ஊரடங்கு நாட்களில் நாம் சம்பாதித்த இந்த விசித்திரமான தேவையில்லாத சோம்பேறித்தனத்தை விட்டொழிப்போம்.  புதிய நாட்களைச் சந்திக்கத் தயாராவோம்.

 

– ஏழுமலை வெங்கடேசன்