ஓ.பி.எஸ்.அணியில் திலகவதி ஐ.பி.எஸ்., இரா. நெடுஞ்செழியன் மகன் இணைந்தனர்

சென்னை:

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க., அணியில், முன்னாள் டி.ஜி.பி., திலகவதி ஐ.பி.எஸ்.,  முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனின் மகன் ஆகியோர் இன்று இணைந்தனர்.

சென்னை வீனஸ் காலனியில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் அவரை சந்தித்து திலகவதி ஐ.பி.எஸ்., முன்னாள் டி.ஜி.பி., திலகவதி, முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனின் மகன் மதிவாணன் ஆகியோர், இன்று அவரது அணியில் இணைந்தனர்.

இது குறித்து திலகவதி, , ‛‛பல ஆண்டுகள் காவல் துறையில் இருந்த போது மக்கள் பணியாற்றி யுள்ளேன். ஓய்வு பெற்ற பிறகு மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபட ஆர்வம் இருந்தாலும், எந்த கட்சியில் சேருவது என்ற சிந்தனை ஓட்டம் இருந்துத.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ஒரு மாத காலம், முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பணியாற்றிய விதம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. பல பிரச்னைகளை அவர் துரித காலத்தில் தீர்த்திருக்கிறார். ஆக வே, அவரது அணியில் சேர்ந்துள்ளேன்,” என்று தெரிவித்துள்ளார்..


English Summary
Thilakavati IPS, Neducheliyan Son also joined with OPS Team