பொள்ளாச்சி: தமிழ்நாடு வளர்வதை பொறுக்க முடியவில்லை; அதனால் பொய்களை பரப்ப வாட்ஸ்ஆப் யுனிவர்சிட்டி நடத்துகிறார்கள். அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்  என மத்திய அரசை கடுமையாக சாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்திரை திட்டங்களால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் முன்னேறுகிறது என்று கூறியதுடன், பாசிசத்தை வீழ்த்த இந்தியாவை காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன் என்றார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ரூ.1273.51 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ரூ.1273.51 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் இன்று  கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.  அங்கு பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டில் நலத்திட்ட உதவிகளை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பொள்ளாச்சியில் 25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டி சிறப்புரை ஆற்றினார்.

முன்னதாக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம்  முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை கோயம்புத்தூர்  சென்றடைந்தார். பின்னர் சாலை மார்கமாக பொள்ளாச்சி சென்றார். அங்கு காலை  10.45 மணிக்கு நலத்திட்ட உதவிகள வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

இந்த விழாவில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 25 ஆயிரம் பேருக்கும், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 509 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவுற்றுள்ள திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் 416 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டினார்.

பின்னர் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் “தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய தெம்போடு துணிவோடு வந்திருக்கிறேன். மக்களிடம் மகிழ்ச்சியை காணும் போது எந்த தேர்தல் வந்தாலும் நாம் தான் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. கலைஞர் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரியில் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். பல்வேறு திட்டங்களை நிறைவேற்றப்பட்டு வருகிறது. மக்களின் கோரிக்கைகளை கருத்துக்களை காது கொடுத்து கேட்கும் முதலமைச்சர் ஆக செயல்படுகிறேன். இதனை கொச்சை படுத்தும் வகையில் சிலர் நடந்துக்கொள்கின்றனர். அவர்களுக்கு தக்க பதிலளிக்கும் காலம் வந்துவிட்டது” என தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் வேலைவாய்ப்பு பெருகி, பொருளாதாரம் உயர்கிறது. இதனை கண்டு சிலர் பொறாமை அடைந்து பொய்களை பரப்ப வாட்ஸ்ஆப் யுனிவர்சிட்டி நடத்துகிறார்கள். அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.

மத்திய அரசின் திட்டத்தை மாநில அரசு தடுப்பதாக பிரதமர் மோடி பொய் சொல்கிறார். எந்த திட்டத்துக்கு மாநில அரசு முட்டுக்கொட்டையாக இருந்தது. தேர்தலுக்கு முன்னதாக பொய் சொன்னால் ஏமாற நாங்கள் ஏமாளிகளா?” எனத் தெரிவித்தார்.

மேலும், கோவை மாவட்டங்களுக்கு புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

அதன்படி, தென்னை வேர்வாடல் நோய் அதிகமாக இருக்கும் மரங்களை வெட்டி அகற்ற ரூ. 14.04 கோடி நிதி ஒதுக்கீடு

3 லட்சம் தென்னங்கன்றுகள் ரூ. 2.80 கோடி மதிப்பில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்

கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும்.

விளாமரத்தூர் முதல் அத்திக்கடவு அணை வரை 8.29 கி.மீ. நீளத்தில் ரூ. 9 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கப்படும்.

கோவை வார்டு எண் 11, பழங்குடியினர் வசிக்கக்கூடிய பகுதிகளில் ரூ. 57 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கப்படும்.

மதுக்கரை ஊராட்சி வாளையாறு வனப்பகுதியில் குடிநீர் தொட்டி கட்டித் தரப்படும்.

காரமடை, ஆணைமலை, சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 4.39 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கப்படும்.

மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் 4 பாலங்கள் கட்டப்படும்.

15 அங்கன்வாடி மையங்கள், 18 நியாய விலைக் கடைகள், 14 சமுதாயக் கூடங்கள், 7 பேரூராட்சிகளில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையங்கள் கட்டப்படும்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மழைநீர் வடிகால், கான்கிரீட் சாலை ரூ. 10 கோடியில் அமைக்கப்படும்.

உக்கடம் பேருந்து நிலையம் ரூ. 20 கோடி மதிப்பில் நவீன முறையில் சீரமைக்கப்படும்.

ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ரூ.10 கோடி மதிப்பீல் விளையாட்டு தளம் அமைக்கப்படும்.

என பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார்.