சென்னை: குடியைக் கொடுத்து கோடிகளில் சம்பாதிக்கிறார்கள்; பிறகு எப்படி மக்களை காப்பாற்ற முடியும், இலக்கு வைத்து மதுபானம் விற்றால் மக்களை காப்பாற்ற முடியாது என கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி மனு அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிறகு பிரேமலதா கேள்வி எழுப்பினார்.
கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து 62க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர. மேலும் பலர் கண் பாதக்கப்பட்டுஉள்ளது. 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த கோரி தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்தித்துள்ளார்.
ஏற்கனவே பாஜக மற்றும் அதிமுக சார்பில் சிபிஐ விசாரணை கோரி மனு கொடுத்துள்ள நிலையில், நீதிமன்றத்திலும் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தேமுக சார்பிலும் மனு வழங்கப்பட்டு உள்ளது.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையிலான மூத்த தலைவர்கள் கிண்டியில் உள்ள ராஜ்பவன் சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுத்தனர்.
பின்னர் ஆளுநர் மாளிகை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஏன் முதலமைச்சர் களத்தில் சென்று சந்திக்கவில்லை என கேள்வி எழுப்பியர், 10 லட்ச ரூபாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கினால் மட்டும் இந்த பிரச்னைக்கு தீர்வாகாது என்று கூறினார்.
மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற மரக்காணம், விழுப்புரம் , செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற விஷச்சாராய மரணம் தொடர்பாக தமிழக அரசு தலையிட்டு தடுத்து இருந்தால் இன்று கள்ளக்குறிச்சியில் இது போன்ற சம்பவம் நடைபெற்று இருக்காது.
திமுக அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் மற்றும் காவல்துறை உதவியுடன் தான் அங்கு கள்ளச்சாராயம் நடைபெற்று வருகிறது. எனவே இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம்.”
ஆளும் கட்சியினர் மதுபான ஆலைகளை நடத்துகிறார்கள். அப்படி இருக்கும்போது அரசு எப்படி மதுபான கடைகளை மூடும் என கேள்வி எழுப்பியதுடன், முதலில் மதுபான ஆலைகளை மூட வேண்டும்.
குடியைக் கொடுத்து கோடிகளில் சம்பாதிக்கிறார்கள் ஆட்சியாளர்கள், அந்த குடியால் மக்கள் உயிரிழக்கிறார்கள் என்று சாடியவர், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உதவியோடு கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது என்றார். இலக்கு வைத்து மதுபானம் விற்றால் மக்களை காப்பாற்ற முடியாது என்றார்.
மேலும் தங்களது கட்சி சார்பில் ஆளுநரிடம் வழங்கப்பட்டுள்ள மனுவில் 6 கோரிக்கைகள் வைக்கப்பட்ட உள்ளதாக கூறியவர், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு விவகாரத்தை மாநில அரசின் சிபிசிஐடி போலீசார் விசாரிப்பதால் உண்மை வெளிவரப் போவதில்லை. அதனால், கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும், இதுக்கு பொறுப்பேற்று மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துச்சாமி பதவி விலக வேண்டும் என்றார்.
தங்களது மனுவை பெற்ற கவர்னர் நாங்கள் கூறிய கருத்துகளை மிக கவனமாக கேட்டார். தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பழக்கம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து கவர்னர் வேதனை தெரிவித்தார். அவரிடம் நாங்கள் இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் என்று கூறினார்.