புதுடில்லி: பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வரும் தமிழ் நடிகர் சித்தார்த் குடியுரிமை (திருத்த) சட்டம் மற்றும் ஜாமியா மிலியா வளாகங்களில் வெடித்த வன்முறை குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரை மறைமுகமாக விமர்சனம் செய்திருந்தார்.
குடியுரிமை சட்டம் மற்றும் ஜாமியா மிலியா விஷயம் குறித்து அவர் 15ம் தேதியன்று இவ்வாறு ட்வீட் செய்திருந்தார்: “இந்த இருவரும் கிருஷ்ணா மற்றும் அர்ஜுனா அல்ல. இவர்கள் சகுனி மற்றும் துரியோதனன். # பல்கலைக்கழகங்களைத் தாக்குவதை நிறுத்து! # மாணவர்களைத் தாக்குவதை நிறுத்து!
அவரது ட்வீட் நிறைய பதில்களைப் பெற்றுள்ளது, பலர் வெளிப்படையாகப் பேசியதற்காக அவரை ஆதரித்தனர். மோடி-ஷா ஜோடியை கிருஷ்ணா மற்றும் அர்ஜுனனுடன் ஒப்பிட்டு இந்த ஆண்டின் தொடக்கத்தில் பேசியிருந்த நடிகர் ரஜினிகாந்தையும் சமூக ஊடக பயனர்கள் குறித்திருந்தனர்.
சித்தார்த் தனது மனதைப் பேசுபவராகவும், அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துபவராகவும் அறியப்படுகிறார். நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான பி.எம்.நரேந்திர மோடியின் ட்ரெய்லர் குறித்து அவரது ட்வீட்டில், படத்தின் ட்ரெய்லரில், மோடி எவ்வாறு தன் ஒற்றைக் கையால் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை அழித்து இந்தியாவுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தார் என்தைக் காட்டவில்லை என்று கிண்டல் செய்தததன் மூலம் ஒரு புயலைக் கிளப்பியிருந்தார்
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ள சித்தார்த், பாலிவுட்டில் வெற்றி பெற்ற ரங் தே பசாந்தி படத்திலும் முக்கிய பங்கு வகித்தவர், புல்வாமா தாக்குதல்களை ‘அரசியல் மயமாக்கியதற்காக’ வும் அவர், நரேந்திர மோடி அரசாங்கத்தை விமர்சித்திருந்தார்.