டில்லி:

த்தியஅரசு நிறைவேற்றி உள்ள புதிய வாகன சட்ட மசோதா நாளை முதல் அமலுக்கு வருவதால், போக்குவரத்து விதிகள் மீறப்பட்டால் வசூலிக்கப்படும் அபராதம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

மோட்டார் வாகன (திருத்த) மசோதா 2019 மசோதாவை பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளி லும் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, புதிய சட்டப்படி போக்குவரத்து விதிகள் அமல்படுத்தப் பட்டு உள்ளது. இந்த புதிய விதிகள் அனைத்தும், நாளை முதல் அமலுக்கு வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி, போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் ரூ.100,

நாளை முதல் போக்குவரத்து விதிகள் மீறினால் அபராதம் ரூ.500 ஆக அதிகரிப்பு.

 ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ.5000 (5ஆயிரம்)

காப்பீட்டு நகல் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.2000 (2ஆயிரம்) அபராதம்.

அனுமதிக்கப்பட்ட வேக வரம்பை மீறி வாகனம் ஓட்டுபவர்களுக்கும் கடுமையான அபராதம் விதிக்கப்படும். மசோதாவின் படி,

அதிக வேகத்தில் இருச்சக்கர வாகம் ஓட்டினால்  ரூ.1,000 முதல் ரூ .2,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம்

வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் ரூ.1000 அபராதம் 

அதி வேகமாக வாகனம் ஓட்டினால் (கார்) அபராதம் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை விதிக்கப்படும்.

 குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால், அவனது பாதுகாவலனும் வாகனத்தின் உரிமையாளரும் குற்றவாளியாகக் கருதப்படுவார்கள். அப்படி செய்பவர்களுக்கு ரூ.25,00 அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். 

 வாகனங்களில் அதிக அளவில் சுமை கொண்டு சென்றல் ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கலாம்.

வாகன ஓட்டிகளே உஷார்.