ற்போது வெளியாகி சக்கை போடு போட்டுவரும் ‘தல’ அஜீத் நடித்துள்ள விவேகம் திரைப்படத்தில் பல புது வகையான  ‘தொழில்நுட்பங்கள்’ பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக படம் பார்ப்பவர்களுக்கு மெய் சிலிர்க்க வைக்கும் அளவுக்கு பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் இதுபோன்ற புது வகை டெக்னாலஜிகளை பயன்படுத்தி திரைப்படம் எடுப்பது சாதாரணமாக நிகழ்வதில்லை. ஒரு சில படத்தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள் மட்டுமே இதுபோன்ற புதியவகை தொழில்நுட்பங்கள் மூலம் சாதனை செய்து வருகின்றனர்.

தற்போது ஓடிக்கொண்டிருக்கும் விவேகம் படம் பார்த்தவர்களுக்கு அதில் உபயோகப்படுத்தப்படும் ரிவர்ஸ் ஹேக்கிங், மோர்ஸ் கோடு, தெர்மல் இமேஜிங் கேமரா போன்ற சில டெக்னிக்கல் சமாச்சாரங்கள் புரியாமல் போயிருக்கலாம். அவர்களுக்கான ஒரு சின்ன விளக்க குறிப்பேடு இது.

இதை புரிந்துகொண்டு நீங்கள் மீண்டும் படம் பார்க்கும்போது, அதன் விவரம் எளிதாக புரிய வரும் என்பதில் சந்தேகமில்லை.

மோர்ஸ் கோடு:

அந்த காலத்தில் தந்தி போன்றவை அனுப்புவதற்கு மட்டுமே மோர்க் கோடு என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதாவது குறிப்பிட்ட தாளத்தைப் பயன்படுத்தி தகவலைப் பரிமாறிக்கொள்ளும் எழுத்துரு குறியீட்டுக்கு மோர்ஸ் கோடு என்பர்.

இதேபோல், விவேகம் படத்திலும், கதாநாயகி  காஜலும், கதாநாயகன்  அஜித்தும் கண்களாலே சிமிட்டி, டிம்மி டிப்பு அடித்து விஷயங்களை பரிமாறுவது மோர்ஸ் கோடு அடிப்படையில்தான். இரண்டு கண்ணசைவுகளுக்கு இடையே இருக்கும் இடைவெளியின் நீளம் பொறுத்து அதன்  அர்த்தம் மாறும். அது இருவருக்கும் தெரியும் என்பதால், அதைக்கொண்டே காதலாட பாடலில் பதிவு செய்துள்ளார்கள்.

புளூட்டானியம் வெப்பன்ஸ்:

அணுகுண்டுகளை தயாரிக்க பயன்படும் மூலப்பொருள் புளுட்டானியம். இதைக்கொண்டே அமெரிக்கா அணு ஆயுதங்களை தயாரிக்க  “மன்ஹாட்டன் புராஜெக்ட்”-ஐ தொடங்கியது.  அந்த புராஜெக்டிலே புளூட்டானியம்  ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டது. இது புளுட்டானியம்  மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.

மனிதர்களாக உருவாக்கப்படும் நிலநடுக்கங்கள் (Man made earthquake) 

பொதுவாக நிலநடுக்கங்கள் பூமிக்கு அடியில் உள்ள தகடுகள் நகர்வதால் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும், பூமிக்கு அடியில் நிகழ்த்தப்படும்  அணு சோதனை காரணமாகவும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் மனிதர்களே.

கடந்த 2016ம் ஆண்டு  ஓக்லஹமா நகரில் நடைபெற்ற நிலநடுக்கத்துக்குக் காரணம், அந்த பகுதியில் செய்யப்பட்ட ஆய்வான,  ஹ்டராலிக் ஃப்ராச்சரிங்கே என்று கூறப்பட்டது. இதன் காரணமாக  ரிக்டர் அளவில் அந்த நிலநடுக்கம் 5.6 பதிவானது.

ரிவர்ஸ் ஹேக்கிங் ( Reverse hacking)

ஒரு கணினிக்குள்  அவரது அனுமதியின்றி அத்துமீறி ஊடுருவது ஹேக்கிங் என சொல்லப்படுகிறது.  அப்படி ஊடுரும் நபரை அவருக்கேத் தெரியாமல் கண்காணிப்பது ரிவர்ஸ் ஹேக்கிங் என அழைக்கப்படுகிறது. இதற்கு உதாரணமாக கூற வேண்டுமானால், எலிப்பொறியை கூறலாம்.

எலிப்பொறிக்குள் வைக்கப்பட்டிருக்கும்  வடையை நைசாக திருட வரும் எலிதான் ஹேக்கர்ஸ். அவர்களை பிடிப்பது ரிவர்ஸ் ஹேக்கிங். இது பேசிக் லாஜிக்.

விர்ச்சுவல் ஹோலோகிராம் (Virtual Hologram)

இல்லாத ஒரு பிம்பத்தை புரொஜெக்‌ஷன் மூலம் உருவாக்குவது. லேசர் கதிர்கள் மூலம் அழகான பிம்பங்கள் உருவாக்கப்படுவதை நாம் பார்த்திருப்போம். கடந்த  சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டின்போது இந்த டெக்னாலஜி மூலமே  குதிரை ஒன்றை உருவாக்கினார்கள். அது மாநாட்டுக்கு வந்திருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.. அதுவும் ஹோலோகிராம்தான்.

ஃபீனிக்ஸ் பறவை:

உண்மையில் இப்படி ஒரு பறவை இருந்ததற்கு ஆதாரங்கள் இல்லை. ஃபீனிக்ஸ் என்பது கிரேக்க புராணங்களில் வரும் ஒரு பறவை. 1400 ஆண்டுகளுக்கு மேல் வாழும் இந்தப் பறவையால், தன்னை மீண்டும் மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என கிரேக்கர்கள் நம்பினார்கள்.

Electronic contact lens:

நம் கண்களுக்குள் ஒரு கணினியை புதைத்து வைக்கும் டெக்னாலஜி இது. இதற்கான பேடண்ட் உரிமையை 2014ல் கூகுள் வாங்கியது. ஆனால், விவேகம் படத்தில் வருவது போல இது கேமராவாக செயல்படாது. இந்த லென்ஸ், பொருத்தப்பட்டவரின் பார்வையை துல்லியமாக்க மட்டுமே உதவும்.

Thermal imaging camera:

சாதாரண ஒளியை வைத்து படமெடுப்பது கேமராவின் வேலை அதேபோல் இன்ப்ரா ரெட் கதிரை பயன்படுத்தி படும் எடுக்கும் காமிராவுக்கு. தெர்மல் இமேஜிங்ம காரா என்று பெயர். இதுபோன்ற காமிராக்காள  1929லே  கண்டுப்பிடிக்கப்பட்டுவிட்டன. இந்த காமிராக்காள  மருத்துவத்துறை  யிலும், ராணுவத்திலும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.