இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோரின் கூட்டணியில் ‘இண்டிபென்டெண்ட் ஆல்பம்’ என்ஜாய் எஞ்சாமி பாடல் வெளியானது.

‘நீயே ஒளி’ என்ற பாடலை தெருக்குரல் அறிவுடன், ஷான் வின்செண்ட் டீ பால் எழுதி, அவரே பாடியிருந்தார். இந்தப் பாடல் சார்பட்டா பரம்பரை படத்திலும் இடம்பெற்றது.

இந்நிலையில் சர்வதேச இசை இதழான ரோலிங் ஸ்டோனின் இந்திய பதிப்பின், ஆகஸ்ட் மாத அட்டைப் படத்தில் ‘எஞ்சாய் எஞ்சாமி’ மற்றும் நீயா ஒளி பாடல்களின் சர்வதேச சாதனைகளை பாராட்டும் வகையில் பாடகி தீ மற்றும் ஷான் வின்செண்ட் டீ பால் ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

பாடலாசிரியர் அறிவின் படம் இடம்பெறவில்லை. தெருக்குரல் அறிவு மீண்டும் ஒருமுறை மறைக்கடிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித்.