சென்னை,
இன்று மாலை முதல்வர் எடப்பாடி இல்லத்தில் மூத்த அமைச்சர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், வைத்திலிங்கம், சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் உள்பட பெரும்பாலான அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
ஆலோசனை கூட்டம் முடிந்ததும், செய்தியாளர்களிடம் பேசிய நிதி அமைச்சர் சசிகலா குடும்பத்தையும், தினகரனையும் கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அதிரடியாக அறிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய ஜெயக்குமாரி, தினகரன் குடும்பத்தினருக்கு கட்சியில் இடம் கிடையாது. சசிகலா குடும்பத்தினரை ஆட்சி மற்றும் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க முடிவு செய்துள்ளதாக ஜெயக்குமார் கூறினார்.
குடும்ப அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், ஆட்சியை தொடர்ந்து சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசித்ததாகவும் கூறினார்.
கட்சியை வழி நடத்த குழு அமைக்க இருப்பதாகவும், ஒற்றுமையாக இருந்து இரட்டை இலையை மீட்போம் என்றும் ஜெயக்குமார் கூறினார்.
அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஒற்றுமையாக உள்ளனர் எனக் கூறிய ஜெயக்குமார், ஓபிஎஸ் கருத்தையொட்டி இரு அணிகளும் இணைந்து ஒற்றுமையாக செயல்படுவது குறித்தும் ஆலோசித்தோம் என தெரிவித்தார்.
தொண்டர்கள் மற்றும் அமைச்சகளின் விருப்படியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.