டில்லி :

லிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் துவக்க விழாவில், இந்திய வீராங்கனைகள் சேலை அணிய இந்திய ஒலிம்பிக் கமிட்டி தடை விதித்துள்ளது.

ஒலிம்பிக், காமன்வெல்த் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் நடக்கும் துவக்க விழாக்களில்,  அனைத்து நாட்டு அணிகளும் தங்களின் தேசியக்கொடியுடன் அணி வகுப்பில் பங்கேற்கும்.

இதில் இந்தியா சார்பில் இதுவரை வீரர்கள் ‘கோட் சூட்’ அணிந்தும் மற்றும் வீராங்கனைகள் சேலை அணிந்தும் பங்கேற்பர்.

கடந்த ரியோ ஒலிம்பிக் (2016) போட்டியில் கூட, நீலம் மற்றும் மஞ்சள் நிறத்திலான சேலையுடன் இந்திய வீராங்கனைகள்  பங்கேற்றனர்.

இதற்கிடையே சேலை அசவுகரியமாக இருப்பதாக வீராங்கனைகள் தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து , இனி பெண்கள் ‘கோட் மற்றும் பேன்ட்’ அணிந்து பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஓ.ஏ.,) அனுமதி அளித்துள்ளது. வரும் ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் காமன்வெல்த் போட்டியில்  இந்தி வீராங்கனைகளும் கோட் சூட் அணிந்து பங்கேற்பார்கள்.

இந்த உத்தரவு தங்களுக்கு நிம்மதி அளித்துள்ளதாக, இந்திய வீராங்கனைகள் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.