சென்னை: ரஜினி கட்சிக்கு தாவிய அர்ஜூன மூர்த்தி பாஜகவில் இருந்து நீக்கப்பட்டு உள்ள நிலையில், அவர் மீண்டும் பாஜகவுக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் என தமிழக பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் தெரிவித்து உள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக அர்ஜூன மூர்த்தி செயல்பட்டு வந்தார். இவர், ரஜினி கட்சித்தொடங்குவதாக அறிவித்ததுடன், அவரு கட்சிக்கு தாவியதுடன், தனது பதவியையும் ராஜினாமா செய்தார். ரஜினி அர்ஜுன மூர்த்தியை ஜனவரியில் தொடங்கப்போகும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பவரை நியமித்துள்ளதாக அறிவித்தார். இதையடுத்து பாஜகவின் அறிவுசார் பிரிவு உள்ளிட்ட அடிப்படை உறுப்பினர் என அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அர்ஜூன மூர்த்தி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று பாஜக அறிவித்தது.
இந்த நிலையில், தற்போது, ரஜினி உடல்நிலை காரணமாக கட்சியை தொடங்கப்போவது இல்லை என்று பல்டியடித்து விட்டார். இதனால்,அவரை நம்பி வந்தவர்கள் அனைவரும் நட்டாற்றில் விடப்பட்டுள்ளனர். தமிழருவி மணியனோ, சாகும்வரை அரசியல் பக்கமே வரமாட்டேன் என்று தெரிவித்துவிட்டு ஓடிவிட்டார்.
இந்த நிலையில், அர்ஜுனமூர்த்தியின் செயல்பாடு என்ன என்பது கேள்விக்குறியானது. இந்த நிலையில், அர்ஜூன மூர்த்தி மீண்டும் பாஜகவுக்கு வந்தால், அவரை ஏற்றுக்கொள்வோம், அதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என மாநில பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.,