டில்லி:

காவிரி மேலாண்மை வாரியம் அமைய வாய்ப்பில்லை என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் கூறி உள்ளார். இது தமிழகத்தில் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

காவிரி நடுவர் மன்ற மேல்முறையீடு வழக்கில், உச்சநீதி மன்றம்  6 வாரத்திற்கு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என  மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. கடந்த மாதம் 16-ந் தேதி  தீர்ப்பு வெளியானது.

உச்சநீதி மன்றம் விதித்த கெடு முடிய இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில்,  காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், கர்நாடக தேர்தலை மனதில் கொண்டு மத்திய  பாரதியஜனதா அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

இந்நிலையில்,  மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேற்று செய்தியாளர்களிடம் பேசும், காவிரி மேலாண்மை வாரியம் வருகிற 30-ந் தேதிக்குள் அமைக்கப்பட வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக ஏற்கனவே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எழுத்துபூர்வமான கருத்துகனை தெரிவிக்கு மாறு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை கேட்டுக் கொண்டு இருப்பதாகவும்,  சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று எந்த இடத்திலும் கூறவில்லை என்றவர்,  ஒரு திட்டத்தை உருவாக்கவேண்டும் என்று தான் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

அதன்படி, அந்த திட்டத்தை எப்படி உருவாக்கி  செயல்படுத்துவது என்பது குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும், இந்த விஷயத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது என்று கூறினார்.

மத்திய நீர்வளத்துறை செயலாளரின் நேற்றைய பேச்சு… தமிழக விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளத.