சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் குறித்து மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
சீனாவை தொடர்ந்து மலேசியா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் இந்த வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் பெங்களூரில் இரண்டு குழந்தைகளுக்கு இந்நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3 மற்றும் 8 மாதம் ஆன இவ்விரு குழந்தைகளும் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியம் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், உலக சுகாதார அமைப்பு வெளியிடும் ஆலோசனைகளை ஏற்று தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
வைரஸ் பரவல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று கூறினார்.
அதேவேளையில், பொதுவாக நோய் தொற்று அதிகமாக பரவக் கூறிய பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கவும் நடமாடும் மருத்துவ உதவி மையங்களை ஏற்படுத்த இருப்பதாக சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.