சென்னை:

நெல்லை கண்ணன் கைதில் உள்நோக்கம் கிடையாது என்று  சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  விளக்கம் அளித்துள்ளார்.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து,  தமிழக சட்டப்பேரவையில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் கேள்வி எழுப்பினார்.

இதற்க பதில் அளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பொதுக்கூட்டத்தில் பிரதமர், உள்துறை அமைச்சர் குறித்து நெல்லை கண்ணன் அவதூறாக பேசியது யாராலும் ஏற்று கொள்ள முடியாது. இதுபோன்று பேசுபவர்கள் எந்தக் கட்சி பிரமுகராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், நெல்லை கண்ணன் கைதில் அரசுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்றார்.

மேலும்,  குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து பேசிய முதலமைச்சர், அவரவர் வீட்டு வாசலில் கோலம் போட்டால் பிரச்சனை இல்லை என்றும் அடுத்தவர் வீட்டில் கோலம் போட்டதால், வீட்டு உரிமையாளர் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் விளக்கம் அளித்தார்.