சென்னை: மழை காரணமாக தமிழ்நாட்டில், மிகப்பெரிய அளவுக்கு பாதிப்பு இல்லை என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டாலும் சந்திக்க அரசு தயாராக உள்ளது என்றவர், மத்தியஅரசின் பேரிடர் நிதி போதுமானதாக இல்லை என்றும் கூறினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை, சென்னை சேப்பாக்கத்திலுள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கனழை காரணமாக பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களின் நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழ்நாட்டில் மழையால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டாலும் சந்திக்க அரசு தயாராக உள்ளது என கூறியதுடன், தெரிவித்துள்ளார். மீட்பு பணிக்காக தென்காசிக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை அனுப்பி வைத்துள்ளோம் என்றார்.
கனமழையை முன்னிட்டு அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது என்றவர், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் மழை காரணமாக மிகப்பெரிய அளவுக்கு பாதிப்பு வந்ததாக தகவல் வரவில்லை என்று கூறியதுடன், புயல் பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்கிய பேரிடர் நிதி போதுமானதாக இல்லை என்றும் கூறினார்.
கனமழை குறித்து 2 நாட்களாக ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏரிகளில் உபரிநீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோர மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
மேலும் செய்தியாளர்களின்கேள்விக்கு பதில் கூறியவர், மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல், மசோதாவை எங்களால் முடிந்தவரை எதிர்ப்போம் என்று கூறினார்.