மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், மலையில் தீபம் ஏற்றுவது என்பது கோவில் நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம் வைத்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை ரத்து செய்யக்கோரி மேல்முறையீடு செய்துள்ள நிலையில், கோவில் நிர்வாகம், ஆட்சியரின் மேல்முறையீட்டு மனுவை இன்று இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது. இந்த வழக்கின் இன்றைய விசாரணையின்போது, ஆஜரான தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர், ‘ திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபத் தூண் அல்ல என்றும், அதற்கான எந்தவொரு ஆதாரமும்இல்லை என கூறி உள்ளது.
மேலும், . திருப்பரங்குன்றம் மலையில் ஒரு இடத்தில்தான் தீபம் ஏற்ற வேண்டும். உரிமையியல் நீதிமன்றத்தில் 1923ம் ஆண்டு வழக்கு விசாரணையின்போது தீபம் ஏற்றுவது தொடர்பாக ஏதும் கோரப்படவில்லை. 73 ஆண்டுகளாக உச்சிப்பிள்ளையார் கோயிலில்தான் தீபம் ஏற்றப்பட்டது; எந்த பிரச்சனையும் இல்லை. முந்தைய தீர்ப்புகளை கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட இடம் அருகே தர்கா உள்ளது. வழக்கமாக உச்சிபிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபம் ஏற்றப்படும். வழக்கமாக தீபம் ஏற்றப்படும் நடைமுறையே இந்த ஆண்டும் பின்பற்றப்பட்டது. மனுதாரரின் மனு பொதுநல வழக்குபோல் தீர்மானிக்கப்பட்டு தனிநீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். மனுதாரரின் கோரிக்கை அடிப்படையில் கோயில் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட இயலாது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூண் உள்ளதா என்பதே அடிப்படைக் கேள்வி என அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டதுடன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது சர்வே தூண் தான் என்று அரசு தரப்பு வாதம் வைத்துள்ளது.
முன்னதாக, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகனின் முதல் படை வீடாகும். இந்த மலை மீது சிக்கந்தர் தர்கா உள்ளது. அதேபோல் மலையின் மீது தீபத்தூண் உள்ளது. இந்நிலையில் தான் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் அனுமதி வழங்கினார். ஆனால் போலீசார் நிறைவேற்றவில்லை.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என்று அனுமதி மறுத்தனர். 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். நீதிபதி உத்தரவின் பேரில் சிஐஎஸ்எப் எனும் மத்திய படைவீரர்கள் அங்கு வந்தனர். அவர்களை மலைக்குச் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரின் மேல்முறையீட்டு மனுக்களை செய்தனர். இந்த வழக்கு கடந்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் டிசம்பர் 5ம் தேதி விசாரணைக்கு வந்தது. இரு தரப்பிலும் வழக்கின் நிலவரத்தைக் நீதிபதிகள் கேட்டனர். அதோடு வழக்கை டிசம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைக்க தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
பல்வேறு தரப்பினர் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய விரும்புவதால் தங்களுக்கு காலஅவகாசம் வேண்டும் எனறு தமிழக அரசு கூறியது. இதையடுத்து வழக்கின் விசாரணையை டிசம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
[youtube-feed feed=1]