புதுக்கோட்டை:
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் முடிவில் எந்த மாற்றமுமில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் குழி பிறையில் நூலக திறப்பு விழாவில் பங்கேற்ற  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் முடிவில் எந்த மாற்றமுமில்லை என்றும், இவர்களது விடுதலை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் குடியரசுத்தலைவருக்குக் கடிதம் மூலம் அழுத்தம் கொடுத்துள்ளார் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்விலிருந்து விலக்கு பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.