சென்னை:
பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைத்துக் கொள்ள வாய்ப்பே இல்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 12 நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மக்கள் மத்தியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்துக் கடுமையான எதிர்ப்புகளை மத்திய அரசு எதிர்கொண்டு வரும் நிலையிலும், விலை குறையவில்லை.

இன்றைய நிலவரப்படி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ள அறிவிப்பின் படி நாட்டு முழுவதும் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 38 பைசா, 37 பைசா என்ற அளவில் உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ஏற்கனவே பல மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயும், டீசல் 90 ரூபாயைத் தாண்டியுள்ள நிலையில், இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது 37 முதல் 38 பைசா வரையிலான உயர்வு பல மாநிலங்கள் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கத் துவங்கியுள்ளது. இதன் மூலம் டெல்லியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 90.58 ரூபாயும், டீசல் 80.97 ரூபாயை அடைந்துள்ளது.

இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல்-ன் விற்பனை விலையில் 61 சதவீதத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் வரியாகப் பெறுகிறது, இதேபோல் டீசல் விற்பனை விலையில் லிட்டருக்கு 56 சதவீத தொகையை வரியாக வசூலிக்கிறது மத்திய மற்றும் மாநில அரசுகள்.

இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பாண்டியராஜன், பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீதான மாநில அரசின் வரியை குறைத்துக் கொள்ள வாய்ப்பே இல்லை என்றும், மத்திய அரசு விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அமைச்சர் பாண்டியராஜன்