சென்னை: திருப்பதி லட்டு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதுதொடர்பான பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள பதிவு லட்டு விவகாரத்தை மேலும் சூடேற்றி உள்ளது.
அவரது பதிவில், மண்டையில் மூளைக்கு பதில் மலம்தானே இருக்கு: திராவிடிய பகுத்தறிவு.. என விமர்சித்துள்ளார். இதுவும் கடுமை யாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது, திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்து லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதுநாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி நாடு முழுவதும் இருந்து பல தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது தேவஸ்தானத்தின் நிர்வாகிகளாக சில கிறிஸ்தவர்கள் சேர்க்கப்பட்டதுதான் இதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து, இதுகுறித்து கருத்து தெரிவித்த ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் நாட்டில் சநாதன பாதுகாப்பு வாரியம் நேரம் வந்துவிட்டது என்றும் திருப்பதி லட்சு தயாரிப்பில் முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி உள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது. நடிகர் பிரகாஷ் ராஜ் பவன் கல்யாண் கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். அதுபோல நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், லட்சு சாப்பிட்ட யாரும் செத்துபோலயே என ஏளமான கூறியிருந்தார். இதுதொடர்பாக ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல விமர்சனங்கள், மீம்ஸ்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், சமூக ஆர்வலரான பியூஷ் மனுஷ் வெளியிட்ட வீடியோவில், பெருமாளே நல்லா லட்டு குடுத்தாரா? அடுத்தவன் என்ன சாப்பிடறானு அவன் தட்ட பாக்காம இருங்க என ஆவேசமாக கூறியிருந்தார். இதுவும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
அதுபோல, திராவிட ஆதரவாளர் ஒருவர் தனது X தளப்பகக்கத்தில் , தலைக்கு மேலே வெள்ளம் போன பிறகு சாண் என்ன முழம் என்ன? ஒஐ முறை திருப்பதி லட்டு சாப்பிட்டவர்கள் இனியும் காய்க றி உணவுப்பழக்கத்தை தொடர வேண்டுமா? என பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவுக்கு பதிலடி கொடுத்துள்ள நடிகை கஸ்தூரி, ஆஹா என்ன ஒரு திராவிடிய பகுத்தறிவு. இவன் மனைவி மகளை கூட்டத்தில் யாரேனும் இடித்தால் கூடவே அனுப்பி வைப்பான் போல. மூளைக்கு பதில் மலம்தானே இருக்கு மண்டையில், இனி அதையே உண்ணலாமே இதுகள் ! இதில் முழு சைவரான திருவள்ளுவர் படம் வேறு என கடுமையாக விமர்சித்துள்ளார்.