டில்லி,

 

சசிகலாவின் மீதான “பயங்கரமான பிம்பம்” மக்களிடையே இருக்கிறது. அவரது.. மற்றும் அவர்
அதிமுக சட்ட விதிகளில் தற்காலிக பொதுச்செயலாளர் என்ற பதவி கிடையாது என்பதால், ஆகவே சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றது செல்லாது என தேர்தல் கமிசன் கருதுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா கடந்த டிசம்பர் மாதம் 29ந்தேதி நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் தற்காலிக பொதுச் செயலாளராக பதவி ஏற்றார். தற்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் சட்டமன்று குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டு முதல்வராக பதவி ஏற்க காத்திருக்கிறார்.
இந்நிலையில் தேர்தல் கமிஷன், அதிமுகவில் தற்காலிக பொதுச்செயலாளர் என்று அ.தி.மு.க. சட்ட விதிகளில் கிடையாது என்றும் இதன் காரணமாக சசிகலாவின் தற்காலிக பொதுச்செயலாளர் பதவி செல்லாது என உத்தரவிடக்கூடும் என்றும் ஒரு தகவல் டில்லியில் உலா வருகிறது.