புதுடெல்லி:

தெலங்கானா, பீகார், டெல்லி உட்பட 8 மாநிலங்களில் பெண் அமைச்சர்களே இல்லை என்ற தகவல் சர்வதேச மகளிர் தினத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆணுக்கு நிகராக எந்த அளவுக்கு பெண்களை உயர்த்தியிருக்கிறோம் என்ற கேள்விக்கு இல்லை என்ற பதிலே கிடைக்கும்.

ஆனால், ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி நடைபெறும் சர்வதேச மகளிர் தினத்தில் பேரணிகள், விவாதம் எல்லாம் நடக்கின்றன.

பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா ராஜ்யசபையில் நிறைவேற்றப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிகளின் எதிர்ப்பால் மக்களவையில் மகளிர் மசோதாவை நிறைவேற்றப்படவில்லை.

அதுமட்டுமல்ல, பீகார், டெல்லி, தெலங்கானா, மிஜோரம், நாகாலந்து, அருணாச்சல பிரதேசம்,மேகாலாயா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் பெண் அமைச்சர்களை இல்லை என்பதுதான் மகளிருக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோம் என்பதற்கு சாட்சியாக உள்ளது.