சென்னை:

தேனி மாவட்ட மலைப்பகுதியில் அமைய உள்ள  நியூட்ரினோ ஆய்வகத்துக்கு எதிராக தொடரப் பட்ட வழக்கில், உச்சநீதி மன்றம் மத்தியஅரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் மதுரை அருகே தேனி மாவட்டத்தில் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ  ஆராய்ச்சி மையம் தொடங்க கடந்த 2011ம் ஆண்டு  சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. இதற்கு அந்த பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருவதாலும், இந்த ஆய்வகம்   அமைத்தால் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு பாதிப்பு ஏற்படும் என்றும்,  சுற்றுச் சூழல் பாதிக்கப்படும்  என்று பசுமை தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், தேசிய பசுமை தீர்ப்பாயம், நியூட்ரினோ ஆய்வக பணிகள் தொடங்கலாம் என உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து,  நான்கு வாரத்தில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும்  நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\