திருட்டு வி.சி.டி.க்காரர்களும் பிழைத்துப்போகட்டும் என்று  தாராள மனசுடன் இயக்குநர் மிஷ்கின் பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குநர் மிஷ்கின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்க.. ஜி.ஆர்..ஆதித்யா இயக்கும் படம், “சவரக்கத்தி”.  இதன் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

இதில் பேசிய மிஷ்கின், இந்தப் பட போஸ்டர்களில் இயக்குநர் ஆதித்தியாவைவிட தன் பெயர் பெரிதாய் போடப்பட்டிருப்பதற்கு பகிரங்க மன்னிப்பு கோரி நெகிழவைத்தார். மேலும், இப்படத்தில் முதன் முறையாக மலையாள நடிகை ஒருவர் (பூர்ணா) முதன் முறையாக சுத்த தமிழில் டப்பிங் பேசியதையும் வெளியிட்டிருந்தோம்.

இதே நிகழ்வில் அவர் பேசிய சுவாரஸ்யமான விசயங்கள் இரண்டு.

மிஷ்கின்

“எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் இல்லாவிட்டால் நாம் எப்படி உயிரோடு இருந்திருப்போம் என்று எனக்கு தெரியவே இல்லை. அவர்கள்தான் இத்தனை வருடங்களாக நம்மை மகிழ்ச்சிப் படுத்தி வருகிறார்கள்.

அவர்கள் நடித்த படங்களை நான் திரையரங்குக்கு சென்று பார்த்திருக்கிறேன். அவை  எனக்கு மிகப் பெரிய பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளன” என்று பேசினார்.

மேலும், “திரையரங்கில் படம் பார்ப்பது ஒரு சமூக கடமை. அப்படிப் பார்ப்பதுதான் அனைவருக்கும் நல்லது.

இங்கே வந்திருக்கும் பலரும் திரையரங்குகளில்தான்  படம் பார்ப்பீர்கள். ஆனால் ஒரு சிலர் திருட்டு டிவிடியில் பார்ப்பீர்கள். பாருங்கள். அதை வேண்டாம் என்று சொல்லவில்லை. திருட்டுத்தனமாக வெப்சைட்டில் படத்தை வெளியிடுவார்கள்.  அதுவும் ஓடும். அதையும் சிலர் பார்ப்பார்கள். அவர்களும் பிழைக்க வேண்டாமா.. பார்க்கட்டும். ஓட்டட்டும்..!” என்று

என்று தாராள மனசுடன் பேசினார் இயக்குநர் மிஷ்கின்.