நீயூஸ்பாண்ட்:

திகார போட்டியில் “இடையில்” வந்த தீர்ப்பால் அதிர்ஷ்டம் அடித்தது அந்த பிரமுகருக்கு. பெரும் பொறுப்பு தனக்கு கைக்கெட்டும் தூரத்தில் இருப்பதாக சந்தோஷக் கனவில் “பாடி” வந்தார் அவர்.

இந்த நிலையில்  அதிர்ச்சி சம்பவம் ஒன்றால் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாதோ என பதட்டத்தில் இருக்கிறார்.

விஷயம் இதுதான்.

மக்கள் பிரதிநிதிகள் பலருக்கு அவர்தான் தற்போது படியளந்தார். இதற்காகன தொகை, அவரது  சொந்த ஊரில் உள்ள வீட்டில் வைத்துததான் பேக் செய்யப்பட்டது. அங்கிருந்து உரியவர்கள் வசம் சேர்க்கப்பட்டது.

இந்த பணியில், அவர் வீட்டில் பந்தோபஸ்துக்கு இருந்த காவல் நபர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

கோடி கோடியாய் பேக் செய்யப்படும் கரன்சியை பார்த்த ஒரு காவல் நபருக்கு, சபலம் தட்டியது. வருவது வரட்டும் என்று ஒரு “சி” யை எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.

விசயம் தெரிந்து பதறிவிட்டார் அதிகார பிரமுகர்.  விசாரணையில், இன்னார்தான் எடுத்தார் என்பதும் தெரிந்துவிட்டது.

இதையடுத்து அதிகார நபர், அதிகாரபூர்வமில்லாத வகையில் புகார் கொடுத்தார்.

உடனடியாக புறப்பட்ட படை, அந்த எஸ்கேப் காவல் நபர் வீட்டுக்கு நேற்று இரவு வந்தது.

வீட்டில் காவல் நபர் இல்லை. அவரது அப்பாவி தந்தைதான் இருந்தார். அவரை இழுத்துச் சென்று விசாரித்தது, படை.

அந்த முதியவருக்கு எந்த விவரமும் தெரியவில்லை. இதை நம்பாத படை, அவரை கடுமையாக தாக்கியது.

இன்று காலை, தான் அந்த முதியவரை அவரது வீட்டுக்கு அழைத்து வந்து விட்டு சென்றது.

அடுத்த சில நிமிடங்களில் அந்த முதியவருக்கு கைகால் இழுத்துக்கொள்ள.. அக்கம் பக்கம் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர் இறந்துவிட்டார்.

விஷயம் மெல்ல கசியத்துவங்கியிருக்கிறது. இது வெளியானால் முக்கிய பொறுப்பு கிடைக்கும் என்ற நிலையில் சிக்கலாகிவிடுமே என்று பதறியபடி இருக்கிறார் அந்த அதிகார பிரமுகர்.

“காவல் நபரான மகன் செய்த தவறுக்கு அவரது தந்தையை கொன்றுவிட்டார்களே… இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டிய மத்திய துறை ஆராய்ந்தால் நாட்டையே அதிரவைக்கும் விவகாரங்கள் வெளியாகுமே..  பெருந்தொகையும், மொத்தக்கூட்டமும் பிடிபடுமே” என்கிறார்கள் அக்கம்பக்கத்தினர்.

அதோடு, “இந்த விவகாரம் வெளியானால், பெரும் மாற்றங்களும் நடக்கும்!” என்றும் சொல்கிறார்கள் அவர்கள்.

ஆனால் அந்த அதிகார பிரமுகரை தொடர்ந்து கண்காணித்துவரும்  அந்த மத்திய துறை இந்த விசயத்தையும் மோப்பம் பிடித்துவிட்டது.

“ஏற்கெனவே அவருக்கு பொறிவைத்திருக்கிறோம். இப்போது வசமாக சிக்கிவிட்டார்” என்ற கிசுகிசுப்பு கேட்கிறது அந்தத் துறையில்.

இந்த நிலையில், அதிகார பிரமுகர், ஏடாகூடமாக ஏதேதோ நடக்கிறதோ என்று சோக கீதம் பாடி வருகிறார்.