சென்னை தி.நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் நடிகை வடிவுக்கரசி கடந்த 10ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு அவர் மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

இந்நிலையில் குடியிருப்பின் காவலாளி இரவு பணிக்கு வந்தபோது பூட்டிய வீட்டில் விளக்கு எரிவதைப் பார்த்த உடனே நடிகை வடிவுக்கரசியின் சகோதரர் அறிவழகனைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.

அறிவழகன் வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 8 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டது தெரிந்தது. இது தொடர்பாக வடிவுக்கரசியின் புகாரின் பேரில் பாண்டிபஜார் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.