சென்னை: “உலகம் உங்கள் கையில்”  என்ற பெயரில்  தமிழ்நாட்டில், மாணவ மாணவிகளுக்கு ர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை  முதல்வர் ஸ்டாலின் டிசம்பர் 5ந்தேதி அன்று மாலை தொடங்கி வைத்தார் .

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக “உலகம் உங்கள் கையில்” என்னும் மாபெரும் திட்டத்தில் 20 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 10 இலட்சம் மடிக்கணினிகளை கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

முன்னதாக முதல்வர் ஸ்டாலின், கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக முதற்கட்டமாக 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” திட்டம் தொடக்க விழாவில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு தொழில்நுட்பக் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” என்னும் மாபெரும் திட்டத்தை சென்னை வர்த்தக மைய வளாகத்தில்   5.1.2026 திங்கட்கிழமை அன்று மாலை 3 மணியளவில் சென்னை நந்தம்பாக்கத்தில்  உள்ள அரங்கில் தொடங்கி வைக்கப்பட்டது.  இந்j நிகழ்வில், மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி, இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் நடிகர்கள் கார்த்தி, விஜய் சேதுபதி, மணிகண்டன் ஆகியோர் கல்விக்காக தமிழ்நாடு செய்து வரும் திட்டங்களை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் திராவிட மாடல் அரசையும் பாராட்டினார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசு, மாணவர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், முதல் தலைமுறை பட்டமளிப்பு (FG) திட்டம், போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைத் திட்டம், சமூக நீதி விடுதிகள் போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டங்களின் தொடர்ச்சியாக, மாணவர்கள் நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் திறன் பெற “உலகம் உங்கள் கையில்” என்னும் அறிவூட்டும் கருப்பொருளின் கீழ் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்க்கு 20 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்கள்.

அந்த அறிவிப்பின்படி, இத்திட்டம் மாநிலம் முழுவதும் இரண்டு கட்டங்களாக நிறைவேற்றப்படுகிறது. முதல் கட்டமாக 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் ‘ நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தில் நடைபெற்றது.

முன்னதாக, சென்னை வர்த்தக மையத்தில் 5.1.2026 அன்று மாலை 3:30 மணி முதல் 6:30 மணியளவு வரையில் 10 இலட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க உள்ள மாபெரும் நிகழ்வின் முன்னோட்டமாக காலை 9:30 மணி அளவில், தமிழ்நாடு அரசு நடத்தும் இரு நாள் (05.01.2026 முதல் 06.01.2026 வரையிலான) தொழில்நுட்பக் கண்காட்சியை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தனர்.

[youtube-feed feed=1]