சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளபடி சென்னை ஈசிஆரில் 30ஏக்கர் நிலப்பரப்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மாநாட்டு மையம் அமைப்பதற்கான ஆய்வு பணியை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினையொட்டி அவரது பெயரில் 30 ஏக்கரில் பன்னாட்டு அரங்கம் (‘கலைஞர் Convention Centre’) அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 2ந்தேதி அன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது அறிவித்திருந்தார்.
அதன்படி, கலைஞர் நூற்றாண்டு விழா மாநாட்டு மையம் உலக தரத்தில் கட்ட முடிவு செய்துள்ள தமிழ்நாடு அரசு, கிழக்கு கடற்கரை சாலை எனப்படும் ஈசிஆர் பகுதியில், மத்தியஅரசின் கலைபண்பாட்டு கூடமா தக்ஷின் சித்ராவை அடுத்து, சுற்றுலாத்துறைக்கு சொந்த 30 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட உள்ளது. அதற்கான நிலம் அடையாளம் காணப்பட்ட நிலையில், அங்கு மெட்ரோ ரயில் உள்பட பல்வேறு வசதிகள் கொண்டு வரவும், அனைத்து வசதிகளுடன், ஓட்டல் மற்றும் பெரிய இருக்கை வசதி கொண்ட மாநாட்டு விழா மண்டம் அமைப்பத குறித்து தமிழக பொதுப்பணித்துறை ஆய்வுகளை தொடங்கி உள்ளது. மேலும் மாநாட்டு மண்டபத்தை வடிவமைக்கும் பணியையும் தொடங்கியுள்ளது.
தற்போதைய நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் 10 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் வர்த்தக மையம் அமைந்திருந்தாலும், கூடுதலாக கட்டப்பட்டு வரும் வர்த்தக மையம் சுமார் 12 ஆயிரம் சதுர மீட்டர் அளவில் அது இருந்தாலும், இது வளர்ந்து வரும் தேவைக்கும், எதிர்காலத் தேவைக்கும் போதுமானதாக இல்லை. அதனால் மேலும் ஒரு மையம் கட்ட தமிழ்நாடு அரசு திட்டமிட்டு வருகிறது.
அதன்படி, கலைஞர் நூற்றாண்டு விழா மாநாட்டு மையம் (Convention Centre) சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் 5 ஆயிரம் நபர்கள் அமரக்கூடிய – உலகத்தரத்திலான மாநாட்டு அரங்கம் அமைக்க முடிவு செய்துள்ளது. மேலும் இந்த மையத்தில், கண்காட்சி அரங்கங்கள், நட்சத்திரத் தரத்திலான தங்கும் விடுதிகள், உணவகங்கள், ஊடக அரங்கங்கள், பூங்காக்கள், பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஆகியவற்றை உள்ளடக்கி மிகப்பிரம்மாண்டமாக உலகத் தரத்தில் அமைக்க ஈசிஆர் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இந்த, உலகத்தரம் வாய்ந்த கலைஞர் நூற்றாண்டு விழா மாநாட்டு மையம் தக்ஷின் சித்ராவை அடுத்த ஈசிஆர் பகுதியில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட உள்ளது. இதற்கான நிலம் அடையாளம் காணப்பட்ட நிலையில், அங்க மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வருவவது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறத மேலும் ஹோட்டலை உள்ளடக்கிய மற்றும் பெரிய இருக்கை வசதி கொண்ட மையத்தை வடிவமைக்கும் பணியை பொதுப்பணித்துறை தொடங்கியுள்ளது.