வாஷிங்டன்:
த்திரிகையாளர்களுக்கு பதிலாக ரோபோக்களை வைத்து ஒலிம்பிக் போட்டி  செய்திகளை சேகரிக்கிறது  அமெரிக்காவின் முன்னணி நாளிதழான வாஷிங்டன் போஸ்ட்.
ஒலிம்பிக் நடைபெறும் பிரேசிலில் தனது நிருபர் படையை களமிறக்கி உள்ளது வாஷிங்டன் போஸ்ட் இதழ். இதுதவிர ஹெலியோக்ராப் என்ற பெயரிலான ரோபோ பத்திரிகையாளர்களையும் அங்கு அனுப்பியுள்ளது.
இந்த ரோபோக்கள்,  அவ்வப்போது பதக்க பட்டியல் குறித்த விவரங்களை டிவிட்டர், பேஸ்புக், லைவ் பேஜ் போன்றவற்றில் நேரடியாக அப்லோடு செய்யும்.
ஒருவேளை பதக்க பட்டியல், வெற்றி-தோல்வி விஷயங்களில் ஏதேனும் குழப்பம் இருப்பின் தலைமையகத்திற்கு ரோபோக்கள் தகவலும் தெரிவித்துவிடும்.
1
தினமும் டிவிட்டரில் 600க்கும் மேற்பட்ட அப்டேட்களை இந்த ரோபோக்கள் செய்ய இருக்கின்றன.  இந்த தகலவல்களை ஒலி வடிவில் கேட்க அமேசான் எக்கோ நிறுவனம் உதவுகிறது.
பிளாக்கில் தகவல் பதிவான பிறகு  அதில் ஏதேனும் தவறு உள்ளதா என்பதை, வாஷிங்டன் தலைமையகத்திலுள்ள விளையாட்டு பிரிவு ஆசிரியர்  கண்காணிக்குமாம்.
இதுபோல ரோபோக்களை வைத்து செய்தி சேகரிப்பது என்பது இது முதல் முறை அல்ல. கடந்த ஜூன் மாதத்தில் மைனர் பேஸ்பால் போட்டித்தொடரின் போது, ஏ.பி செய்தி ஏஜென்சி நிறுவனம் இப்படி ரோபோக்களை வைத்து செய்தி சேகரித்தது.