பரத் பாலா மற்றும் விர்ச்சுவல் பாரத் உருவாக்கத்தில் கூகிள் வழங்கும் இப்பாடல் ஒரு பிரசார் பாரதியின் முன்னெடுப்பு. செயற்கை நுண்ணறிவின் மூலம் எப்படி இந்திய குரல்களை ஒன்றிணைத்து அவற்றில் உணர்ச்சியை கொண்டு வரமுடியும்? ஒலி உணர்வு தொழில்நுட்பம் இல்லாமல் எப்படி இந்தியா பாடுகிறது? இந்திய மக்களை, இந்தியாவுடனான அவர்களின் உணர்ச்சியையும் தொழில்நுட்பத்தையும் ஒன்றாக இணைக்கும் சரியான உணர்வு எது? ஒரு மெய்நிகர் தேசத்தை உருவாக்க இந்தியர்களை எவ்வாறு இணைப்பது?
மெய்நிகர் தேசிய கீதம்’ சுதந்திர தினத்தன்று கூகிள் தேடல், யூடியூப் மாஸ்ட்ஹெட் மற்றும் தூர்தர்ஷனில் வெளியாகிறது. இந்தியாவின் 73வது சுதந்திர தினத்தன்று அருணாச்சல பிரதேசத்தின் மலைகள் முதல் தார் பாலைவனம் வரை இந்தியர்களின் குரல்கள் ஒன்றிணைந்த ஒரு முக்கிய நிகழ்வு அரங்கேறியது.
2020, இந்தியர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கும் ஒரு ஆண்டு. இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் உள்ள இந்தியர்கள் ஒன்றாக சேர்ந்து பாடும் இந்த தேசிய கீதம் வலிமையான உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. கூகிள் செயற்கை நுண்ணறிவு மூலம் சேகரிக்கப்பட்ட குரல்கள், பரத்பாலா மற்றும் அவருடைய விர்ச்சுவல் பாரத் குழுவினரால் மீளுருவாக்கம் செய்யப்பட்ட ஜன கன மன பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பிரசார் பாரதி, கூகிள், விர்ச்சுவல் பாரத் ஆகியோரின் தனித்துவமான கூட்டுமுயற்சியின் மூலம், இயக்குநர் பரத்பாலா மற்றும் அவருடைய விர்ச்சுவல் பாரத் குழுவினரால் படமாக்கப்பட்ட தேசிய கீதத்தை செயற்கை நுண்ணறிவு இசை அனுபவத்துடன் பாட இந்தியா அழைக்கப்பட்டது.
இது குறித்து பரத்பாலா கூறும்போது, ‘நாம் ஒருவருக்கு ஒருவர் விலகியிருக்கும் இந்த காலகட்டத்தில், மெய்நிகர் முறையில் இந்திய மக்களை ஒன்றிணைப்பதும், ஒரு மெய்நிகர் தேசத்தை உருவாக்குவதுமே என்னுடைய இந்த யோசனைக்கு காரணம்.
இந்தியாவை மெய்நிகர் முறையில் ஒன்றினைத்து, இந்தியர்களை நம் கலாச்சாரம் பற்றிய குறும்படங்கள் மூலம் டிஜிட்டல் முறையில் ஒரே இடத்தில் இணைப்பதே என்னுடைய யோசனை யின் நோக்கம். எனவே இது எல்லா காரணிகளின் இயல்பான மற்றும் சரியான கலவையாக இருந்தது. மேலும் முதன் முறையாக ஒரு தனித்துவமான செயற்கை நுண்ணறிவு இசை அனுபவத்தில் குரல் களை ஒன்றிணைப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. இந்திய குரல்களை தொழில்நுட்பம் போல தெரியாமல் மனிதக் குரல்களை போலவே உணரவைக்கும்படி எவ்வாறு பயன் படுத்தப் போகிறோம். உணர்வுகளை எவ்வாறு தக்கவைக்க போகிறோம்? எல்லாவற்றுக்கும் மேல் உலகின் மிகச்சிறந்த தேசிய கீதத்துக்கு எவ்வாறு ஆழமான, உண்மையான மரியாதையை செலுத்தப் போகிறோம்.
இதுபோன்ற யோசனைகளுக்கு ஒரு வகை யான தொலைநோக்குப் பார்வையும் உண்மையான இந்திய நம்பிக்கையும் தேவை. கூகிள் இந்தியாவின் தலைவர் சஞ்சய் குப்தாவுக்கு என்னுடைய உண்மையான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஜூலை மாதம் ஒரு நள்ளிரவில் அவர் என்னை அழைத்து சுதந்திர தினத்தன்று இந்திய நாடு ஒன்று சேர்ந்து பாடும் இந்த யோசனையை என்னிடம் கூறினார். இது ஒரு சிறந்த கூட்டுமுயற்சியாக இருக்கும் என்று எனக்கு தோன்றியது.
2000ஆம் ஆண்டில் 50 இந்திய மேஸ்ட் ரோக்கள் உடன் இணைந்து ஜன கன மன பாடலை உருவாக்கினோம். என்னை பொறுத்தவரை இது நவீன தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட தேசிய கீதத்தின் புதிய வெளிப்பாடு. இது ஒரு சரியான பொருத்த மாக இருந்தது.
கூகிளின் ‘கூகிள் ஃபார் இந்தியா’ திட்டம் முற்றிலும் புதியது. டிஜிட்டல் மாற்றத்தின் மூலம் இந்திய சமுதாயத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் உயர்த்துவது என்பது ஒரு நேர்மையான நோக்கம். அவர்கள் உயரிய நோக்கம் கொண்டவர்களாக இருப்பதால் இது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை யும், மகிழ்ச்சியையும் கொடுத்தது. படத்தின் இறுதி வடிவம் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அது இந்தியாவிலும், உலகின் அனைத்து பகுதி களிலும் உள்ள ஒவ்வொரு இந்தியர் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத் தும் என்று நம்புகிறோம்.