தருமபுரி: எங்க ஏரியாவுல டாஸ்மாக் மதுபானக் கடை வேண்டும் என ஆண்கள், பெண்கள் என திரண்டு வந்து கிராம மக்கள் தரம்புரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இது பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு குடிகாரன்களின் மாநிலமாக மாறி வருகிறது. அரசே மதுபான கடைகளை நடத்தி மக்களை குடிகாரர்களாக மாற்றி வருகிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தாலும், வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் மாநில அரசு, மக்களுக்கு இலவசங்களை வாரியிறைத்து, தமிழக மக்களை சிந்திக்க விடாமல் குடிகாரன்களாக மாற்றி வருகிறது.
தமிழக மக்களில், கிட்டத்தட்ட 75%/88% மக்கள் மதுப்பழக்கம் உள்ளவர்கள் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் வாரம் ஒரு முறை குடிப்பவர்கள் 70% பேர் என்றும், இதில் இளைஞர்கள் அதிகம் குடிப்பதாகவும், தினமும் குடிப்பவர்கள்45% பேர் என்றும், இதில் 20 சதவிகிதம் பேர் பெண்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து ஏராளமானோர் உயிரிழந்தனர். 2024 சூன் மாதம் 8ந்ேதேதி அன்று கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தை குடித்ததால் 67 பேர் இறந்தனர்,100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தால் அதிக உயிர்களை பலி வாங்கியது இந்த கள்ளக்குறிச்சி சாவாகும். இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயவேட்டை நடத்தப்பட்டு, விற்பனை தடுக்கப்பட்டது.
இதனால் பல கிராமவாசிகள் சாராயம் குடிக்க அரசு மதுபான கடைகளை நாட வேண்டிய நிலை உள்ளது. சிறிய கிராமங்களில் மதுபான கடைகள் இல்லாததால் அருகே உள்ள மதுபான கடைகளை நாடி செல்கின்றனர். இதனால், அவர்களுக்கு காலவிரயம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராமத்திர் ஆண்கள் பெண்கள் திரண்டு வந்து, தங்கள் பகுதியில் மதுபான கடை வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக, மதுபான கடைகளை மூடச்சொல்லித்தான் பெண்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்துவது வழக்கம். ஆனால் , இங்கு கிராமத்தினரே திரண்டு வந்து தங்கள் பகுதியில் மதுபானக் கடை வேண்டும் எ கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 60-க்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் இயங்கி வருகிறது. ஆனால், தரம்புரியில் உள்ள நலப்பரம் பட்டி, கெட்டூர், பலஞ்சர அள்ளி, ஆதனூர், நல்லாம்பட்டி, வண்ணாத்திப்பட்டி ஆகிய பகுதிகளில் டா்ஸ்மாக் மதுபான கடைகள் இல்லை. இதனா்ல அவர்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சென்று மதுவாங்க வேண்டிய நிலை உள்ளதாம். இதனால், தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என 7 கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.