இம்ரான்கான்

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானியர்களுக்கும் அமெரிக்கா தடை விதிக்கட்டும் என முன்னாள் பாகிஸ்தன் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெரீக் ஈ இன்ஸாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான்  அதிரடி பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அமெரிக்காவிற்குள் நுழைய 7 இஸ்லாமிய நாடுகளுக்கு தடை விதித்துள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் தெரீக் ஈ இன்ஸாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான்  லாகூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது,

7 முஸ்லீம் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல பாகிஸ்தானியர்களுக்கும் தடை விதிக்கப்படலாம் என தகவல்கள் கூறுகிறது. ஆனால்ர, பாகிஸ்தானியர்களுக்கும்  விசாவை  தடை செய்ய வேண்டும் என விரும்புகின்றேன், அதற்காக இறைவனிடம் வேண்டுகின்றேன் என்று அதிரடியாக கூறினார்.

ஏனென்றால், அவ்வாறு செய்தால்தான் பாகிஸ்தானியர்கள் அமெரிக்காவுக்கு செல்லாமல் பாகிஸ்தானுக்காக வேலை செய்வார்கள். பாகிஸ்தான் முன்னேற பாடுபடுவார்கள் என்றார்.

மேலும், நம் பிரதமர் நவாஸ்செரீப் தலைவலித்தால் கூட வெளிநாட்டில் தான் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்.  ஆனால் தற்போது பாகிஸ்தானியர்களுக்கு தடை வர இருக்கிறது. இப்ப என்ன செய்வார். இப்போதாவது நவாஸ் செரீப் விரைந்து செயல்பட வேண்டும் என்றார்.

மேலும், நான்  நவாஸ் செரீப்  போல் கோழை கிடையாது என இந்திய பிரதமர் மோடிக்கு நினைவுபடுத்திக் கொள்கிறேன்,  இந்திய மக்கள் கூட பாகிஸ்தான் மீதான போரை விரும்ப மாட்டார்கள்.

இவ்வாறு அதிரடியாக பேசினார்.