கொழும்பு:
லங்கை ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு ஐநா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளன.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

எரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு அதிகரிக்கப்பட்டமையை கண்டித்து ரம்புக்கனையில் பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு ஐநா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இலங்கை அதிபர் பதவி விலகக் கோரி 1 வாரம் வேலை நிறுத்தம் செய்வதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. உணவு பொருட்கள் விலை ஒரே வாரத்தில் கடும் உயர்வு மக்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.