ஸ்ரீஹரிகோட்டா:

மது நாட்டின் எல்லைகளை கண்காணிக்கும் வகையில் புதிய செயற்கை கோளை தயாரிக்கும் பணியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஈடுபட்டு உள்ளது.

நமது அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளால் நமது நாட்டின் எல்லை பகுதி ஆக்கிரமிப்பு மற்றும் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகள் ஊடுருவல் காரணமாக பதற்றம் நீடித்து வருகிறது. அவ்வப்போது ச.ண்டைகளும் ஏற்பட்டு வீரர்கள் பலியாகி வருகின்றனர்.

இதை தடுக்கும் பொருட்டுஇ இந்திய எல்லைகளை கண்காணிக்கவும் பாதுகாக்கவும் இஸ்ரோ பிரத்தியேக செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த தீவிரம் காட்டி வருகிறது.

இது தொடர்பான ராணுவத்தினரின் பரிந்துரைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின் பேரில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதைத்தொடர்ந்து,  சாட்டிலைட் மூலமாக எல்லையை பாதுகாக்க திட்டமிடப்பட்டுள்ள இஸ்ரோ,  இதற்கென பிரத்தியேக செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த தயாராகி வருகின்றனர். இந்த செயற்கை கோள் மூலம், எதிரி நாட்டை சேர்ந்தவர்கள் ஊடுவல் கண்காணிக்கப்படும் மற்றும் , எல்லையை பாதுகாக்கும் துணை ராணுவப் படையினருக்கு இந்த செயற்கைக் கோள் வழிகாட்டி யாக திகழும் என்று கூறப்படுகிறது. செயற்கைகோள் வழிகாட்டி மூலம், தேவையான இடத்தில் தேவையான ராணுவத்தினர் குவிக்கப்பட்டு, அயல்நாட்டவர்கள் ஊடுருவல் தடுக்கும் வகையில் இந்த செயற்கை கோள் உருவாக்கப்பட்டு வருகிறது.