சென்னை: மெட்ரோ ரயிலின் 2வது கட்டத்தின் ஒரு பகுதியான நடைபெற்று வரும், பூந்தமல்லி – போரூர் இடையேயான மெட்ரோ ரயில் 2-ம் கட்ட சோதனை ஓட்டம் இந்த மாதம் இறுதியில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

சென்னை: இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின்படி, லைட்அவுஸ் டூ பூந்தமல்லி வரையிலான ரயில் பாதையில், போரூர் – பூந்தமல்லி வரை உயர்மட்ட பாதையின் கட்டுமான பணி நிறைவு பெற்றுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் கடந்த மார்ச் மாதம் தெரிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து ஓட்டுநர் இல்லாத ரயிலின் முதல்கட்ட ரயில் சோதனை ஓட்டம் அந்த வழித்தடத்தில் நடைபெற்றது. கடந்த மார்ச் 20ந்தேதி அன்று 2.5 கி.மீ. தொலைவுக்கு முதல்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்த நிலையில், இம்மாத இறுதியில் மெட்ரோ ரயிலின் 2 ஆம் கட்ட சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பூந்தமல்லி – போரூர் வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் 2 ஆம் கட்ட சோதனை ஓட்டம் இம்மாத(ஏப்ரல்) இறுதியில் நடைபெற உள்ளது என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துஉள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள மெட்ரோ ரயிலுக்கு பெரும் வரவேற்பு கிட்டிய நிலையில், அதன் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகினற்ன. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் II-ல் 118.9 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களில் 128 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, பூந்தமல்லி பணிமனை நிலையத்திலிருந்து கலங்கரை விளக்கம் வரை 26.1 கி.மீ நீளம் கொண்ட வழித்தடத்தில் போரூர் வரையிலான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.
இந்த நிலையில் சென்னையில் ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட சோதனை ஓட்டம் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை மொத்தம் 9 கி.மீ. தூரத்துக்கு 2 ஆம் கட்ட சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது. பூந்தமல்லி – போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை இந்தாண்டு டிசம்பர் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
2ம் கட்ட மெட்ரோ ரயில்: போரூர் – பூந்தமல்லி வரை உயர்மட்ட பாலப்பணி நிறைவு….