பாரம்பரிய மூலிகை மருந்துகளுக்கு 18% ஜி.எஸ்.டி. வரி வதித்துள்ளதால் மூலிகை மருத்துவம் பெரும் பின்னடைவை  சந்திக்கும் நிலையில் இருப்பதாகுவும், ஆகவே வரியை குறைக்க வேண்டும் என்றும் பாரம்பரிய மருத்துவர்கள் தெரிவிக்கின்றன.

பாரம்பரிய சித்தவைத்தியரான சித்தர் திருத்தணிகாசலம் இது குறித்து தெரிவித்ததாவது:

திருத்தணிகாசலம்

“ஆயுர்வேத சித்த மருத்துவம் என்பது ஏறக்குறிய அழிந்துவிட்டது என்ற நிலையில் இருந்து தற்போது மீண்டும் துளிர்விட்டு வருகிறது. இம் மருத்துவத்தை நோக்கி மக்கள் மெல்ல மெல்ல வர ஆரம்பித்திருக்கிறார்கள். பெரும்பான்மையான மருத்துவ பிரச்சினைகளுக்குத் தீர்வாக இம் மருத்துவத்தை மக்கள் நம்புகிறார்கள்.

இந்த நிலையில் பாரம்பரிய மருந்துகளுக்கு 18% வரி ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் மூலிகை மருந்துகள் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 2 சதவிகிதம்தான். ஆனால் நம்மைவிட பாகிஸ்தான் ஏற்றுமதி அதிகமாக இருக்கிறது. மொத்தத்தில் மூன்றி்ல் ஒரு பங்கை சீனா கையில் வைத்திருக்கிறது.

இந்தியா பின்னடைவைத்தான் சந்தித்திருக்கிறது.  இதற்குக் முக்கிய காரணம் ஜி.எஸ்.டி. வரி விதிப்புதான்.

உதாரணாக சாதாரண  பாரம்பரிய மூலிகை மருந்துகள் மற்றும் மூலப்பொருட்களுக்கு ஆஸ்திரேலியாவில் வரியே கிடையாது. மலேசியாவில்  5% வரி விதிக்கப்படுகிறது.

இந்தியாவிலோ  18% ஜிஎஸ்டி வரி!

சமீபத்தில் ஒரே பில்லுக்கு ஒன்றறை லட்சம் ஜிஎஸ்டி வரி கட்டினோம்.

ஆகவே மூலிகை மருந்துகளை ஏற்றுமதி செய்யவும், நம் நாட்டு மக்கள் அதிகம் பயன்படுத்தவும் வரியை குறைப்பது மிகவும் அவசியம்.

ஜி.எஸ்.டி.க்கு முன்பு, மத்திய வரி (சி.எஸ்.டி.) இரண்டு சதவிகதமாக இருந்தது. மாநிலத்தில் தமிழக அரசு முழுமையான வரிவிலக்கு அளித்திருந்தது.

இப்போது 18 சதவிகிதம் என்பதால் சாதாரண மக்கள் மூலிகை மருந்துகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்ப்பட்டிருக்கிறது.

உதாரணமாக நிலவேம்பு கசாயம் இரு நூறு ரூபாய் வரை விற்கிறது.

தற்போதைய மத்திய அரசு ஆட்சிக்கு வந்தபிறகு,  பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு, மிகப்பெரும் சந்தை வாய்ப்பையும் ஆதரவையும் தரும் என்று நம்பினோம். அதை இனியாவது மத்திய அரசு செய்து பாரம்பரிய மூலிகை வைத்திய முறை செழிக்க வழிவகை காண வேண்டும். இதை பாரம்பரிய மருத்துவர்கள் சார்பாக கோரிக்கையாக வைக்கிறேன்” என்றார் சித்தசர் திருத்தணிகாசலம்.