சென்னை:
ஆவடி அருகே கொனம்பேடு ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில் மற்றும் மசூதி ஆகியவற்றை சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி இடிக்கப்பட்டு விட்டதாக உயர்நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அருகே உள்ள உள்ள கொனம்பேடு எரியை ஆக்கிரமித்து சிலர் வீடுகள் கட்டியுள்ளதாகவும் மற்றும் கோவில், மசூதிகள் கட்டுப்பட்டு உள்ளதாகவும், இதனால் நிலத்தடிநீர் சேமிக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு நலச்சங்கத்தினர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், பி.வேல்முருகன் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளைத் தொடர்ந்து, ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவில், மசூதி மற்றும் 17 குடியுருப்புகளையும் இடித்து அகற்றவும், அந்த பகுதியில் அனுமதியில்லாமல் செயல்பட்டு வரும் குடிநீர் ஆலைகளை அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டது.
இந்த நிலையில், ஏரியில் கட்டப்பட்ட வீடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்காமல் நகராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வந்தது. இது குறித்து குடியிருப்போர் சங்கத்தினர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அவடி கார்ப்பரேஷன் சார்பில் சிறப்பு வழக்கறிஞர் ஏ.என்.தம்பிதுரை ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, நீர்நிலைகளில் கட்டப்பட்ட கோவல், மசூதி மற்றும் வணிக கட்டமைப்புகளும் அகற்றப்பட்டு விட்டதாகவும், ஏரி படுக்கையில் குடியிருப்புகள் கட்டிய 17 பேருக்கு மாற்று தங்குமிடம் வழங்க தமிழக சேரி அனுமதி வாரியத்திற்கு திட்டம் அனுப்பப்பட்டதாகவும்,
அதன்படி, 17 ஆக்கிரமிப்பாளர்களுக்கு பூச்சி அத்திப்பேடு கிராமம் அருகே கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு உள்ளதாகவும், விரைவில், 17 ஆக்கிரமிப்பாளர்களும், ஏரியிலிருந்து அகற்றப்பட்டு, அங்கு தங்க வைக்கப்படுவார்கள் என்று உத்தரவாதம் அளித்தார்.
மேலும், நிலத்தடி நீரை சட்டவிரோதமாக பிரித்தெடுத்ததாக குற்றச்சாட்டு தொடர்பாக, சட்டவிரோதமாக பிரித்தெடுத்ததற்காக ஐந்து தனியார் போர்வெல்கள் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், செந்தில்குமார் மற்றும் ஜெயகுமார் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஆவனங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆவடி மாநகராட்சி எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நிதிமன்றம், வழக்கு க விசாரணைக்கு ஜனவரி 22 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.