ஐஐடி ஆராய்ச்சி பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமா? – மாணாக்கர்களுக்கு வாய்ப்பு!

Must read

சென்னை: பொறியியல் மற்றும் கலை-அறிவியல் கல்லூரிகளின் மாணாக்கர்களுக்கான ஆராய்ச்சிப் பயிற்சி வகுப்புகளுக்கான அறிவிப்பு சென்னை ஐஐடி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சென்னை ஐஐடி சார்பில், பொறியியல் மற்றும் கலை-அறிவியல் கல்லூரி மாணாக்கர்களுக்கான ஆராய்ச்சி பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.

இந்தப் பயிற்சி வகுப்புகள் கோடை விடுமுறையில் நடத்தப்படுகிறது. மொத்தம் 2 மாதங்கள் நடத்தப்படவுள்ள இந்தப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளும் மாணாக்கர்களுக்கு ரூ.6000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.

தகுதியான மாணாக்கர்கள் பிப்ரவரி 29ம் தேதிக்குள் ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வேண்டும். இளநிலை மற்றும் முதுநிலைப் பொறியியல், கலை -அறிவியில் படிப்புகள் மற்றும் மேலாண்மைப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விரிவான தகவல்களுக்கு www.iitm.ac.in/contactus என்ற வலைதளம் செல்க.

More articles

Latest article