தூத்துக்குடி:

மிழர்களுக்கு இந்தி தெரியாததால்   மத்தியஅரசு பணிகளில் இடம் கிடைக்கவில்லை என்று தமிழக அமைச்சர்  ராஜேந்திரபாலாஜி  தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் ரெயில்வே உள்பட மத்தியஅரசு துறைகளில் உள்ள வேலைவாய்ப்பில், தமிழர்கள்  திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலை தளங்களில் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை என்ற ஹேஸ்டேக் டிரென்டிங்காகி வருகிறது.  திமுக உள்பட தமிழக அரசியல் கட்சிகளும் மத்திய அரசு பணிகளில் தமிழகத்தில் தமிழர்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் ஓட்டப்பிடாரத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்து, மோடியை டாடியாக பாவித்து வரும் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இந்தி தெரியாததால் மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்று மத்தியஅரசுக்கு மீண்டும் ஜால்ரா தட்டி உள்ளார்.

‘தூத்துக்குடியில் ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரயில்வே துறையில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு இடம் கிடைக்காதற்கு காரணம் திமுக தான் என்று குற்றம் சாட்டிய அமைச்சர், தமிழர்களள்  இந்தி படிக்க தெரியாததன் காரணமாக தான் மத்திய துறைகளில் இடம் கிடைக்கவில்லை என்றார்.

மேலும், திமுக தலைவர் குடும்பத்தினர் நன்கு இந்தி  படித்துள்ளனர் என்று கூறியவர், அவர்களைத் தவிர யாரும் இந்தி படிக்கவிடாமல் செய்தார்கள் என்றும் கூறினார்.