காபூல்:
ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரகங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் எனத் தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் அங்கிருந்த தூதரகங்களை மூடிவிட்டன.
தூதரக ஊழியர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி வருகிறார்கள். இவர்களில் பலர் நாட்டை விட்டுச் சென்று விட்ட நிலையில் மற்றவர்கள் தங்களது நாட்டுக்குச் செல்வதற்காக காபூல் விமான நிலையத்தில் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், தாலிபான்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரகங்களுக்குப் பாதுகாப்பு அளிப்போம்; ஆப்கானில் சிக்கியுள்ள வெளிநாட்டினர் அச்சப்படத் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel