சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள ‘சென்ட்ரல் ஸ்கொயர்’ (சென்ட்ரல் மதத்திய சதுக்கம்) நாளை முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், சென்ட்ரல் ரயில் நிலையத்துடன் மெட்ரோ ரயில் நிலையம் ஒருங்கிணைத்து ரூ.400 கோடி ரூபாய் மதிப்பில் அழகிய செடிகளுடன் வாகன நிறுத்தம் மற்றும் பொதுமக்கள் ஓய்வெடுக்கும் வகை யில் பிரமாண்டமான சதுக்கம் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள “டைம்ஸ் ஸ்கொயர்”, லண்டனில் உள்ள “டிராபல்கர் ஸ்கொயர்” போன்று சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே, “சென்ட்ரல் ஸ்கொயர்” அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சதுக்கத்தில், நிழல் தரும் செடிகள், அழகிய செடிகள் மற்றும் நீரூற்றுகளுடன் 500 கார்கள், 1500 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு இடவசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், சுரங்கப்பாதை வழியாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கும், சாலையை கடக்கவும் பொதுமக்கள் சிரமமின்றி செல்லவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மத்திய சதுக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.
சென்ட்ரல் ஸ்கொயர் முதற்கட்ட பணிகள் டிசம்பர் இறுதிக்குள் முடிவடையும்…! அதிகாரிகள் தகவல்…