முசாபர்பாத்:
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பேச்சை கண்டித்து பாகிஸ்தான் கொடியை காஷ்மீர் மக்கள் எரித்தனர்.
காஷ்மீரின் ஒரு பகுதி ஏற்கனவே பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. அங்கு கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் நவாஸ்ஷெரிபின் கட்சி வெற்றி பெற்றது.
இதன் காரணமாக பிரதமர் நவாஸ் ஷெரீப், காஷ்மீர் என்றாவது ஒருநாள், பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாறும் என்று கூறினார்.
நவாஸின் இந்த திமீர் பேச்சுக்கு இந்திய அரசியல் கட்சி தலைவர்கள், காஷ்மீர் முதல்வர் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்..
இதற்கிடையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், நவாஸ் ஷெரிப் கட்சி, தேர்தலில் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்றதாக அங்குள்ள மக்கள் நவாசுக்கு எதிராக போராடி வருகிறார்கள். போராட்டக்காரர்கள் பாகிஸ்தான் தேசிய கொடியை எரித்து போராடுகின்றனர்.
இந்த போராட்ட வீடியோவை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ளது