புதுடெல்லி:
ந்திய கடற்படைக்கு 4 அதி நவீன ரோந்து போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்காக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.
ஏற்கனவே  2009ல் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடப்பட்டு 14,070 கோடி ரூபாய் மதிப்பில் P-8 ரக ரோந்து விமானங்களை இந்தியா வாங்கியது. 2013ல் இந்த விமானங்கள் அனைத்தும் இந்திய கடற்படைக்கு வந்து சேர்ந்தது.

P-8 ரக விமானம்
P-8 ரக விமானம்

இந்த விமானங்கள் அனைத்தும் தமிழ்நாட்டிலுள்ள ராஜாளி கடற்படை தளத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன.
தற்போதும் அதே P-8 ரக 4 விமானங்களை வாங்க  மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மதிப்பு தோராயமாக  6,700 கோடி ரூபாய்.  இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானதாக டெல்லி வட்டார தகவல் கூறுகிறது.  அடுத்த மூன்று ஆண்டுக்குள்  இந்த விமானங்களை அமெரிக்கா, இந்தியாவிடம் ஒப்படைக்கும்.
இந்தியாவை அவ்வப்போது மிரட்டும் சீனாவின் நடவடிக்கையை கண்காணிக்கவும், இந்திய எல்லைபகுதிகளை  தீவிர கண்காணிக்கவும் இந்த ரோந்து விமானம் வாங்கப்படுகிறது. இந்த விமானம் மூலம் தொலை தூரத்தில் உள்ள இலக்குகள்,  நீர்மூழ்கி கப்பல்களின் நடமாட்டம் போன்றவை கண்காணிக்க முடியும். ஏற்கனவே உள்ள ரோந்து விமானம் மூலம் இந்திய கடற்பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த விமானத்தில் ஏவுகணைகள், ராகெட்டுகள், கண்காணிப்பு ரேடார் கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கும். இதன்  காரணமாக இந்தியாவின் எல்லை பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க முடியும் என கடற்படைஅதிகாரிகள் கூறினர்