திருவனந்தபுரம்:
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளாவில் 8ந்தேதி தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். அதன்படி, இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்படும் என வானிலை மையம் தெரிவித்தி ருந்தது.
இந்த நிலையில், வருகிற 8-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு பருவமழை மாலத்தீவு கள், குமரி கடல் பகுதிகள், தெற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் மிதமாக காணப்படுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் தென்கிழக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதியிலும் அடுத்த 24 மணி நேரத்தில் பருவமழை அறிகுறிகள் அதிகரிக்கும்.
இதேபோல தெற்கு அரபிக்கடலின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் பருவமழை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் வருகிற 8-ந்தேதி முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு அதிகரித்து உள்ளது. இதற்கான சாதகமான சூழ்நிலை இப்போதை தென்பட தொடங்கி விட்டது.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைநெட்டும் வருகிற 8-ந்தேதி தென்மேற்கு பருவமழை பெய்யுமென்றும் அறிவித்துள்ளது.