சென்னை,
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு மனிதாபிமான அடிப்படையைில் மட்டுமே சுமூக தீர்வு காணமுடியும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
எல்லை தாண்டி மீன்பிடிக்க வரும் தமிழக மீனவர்களை ஒடுக்கும் பொருட்டு இலங்கை அரசாங்கம் புதிய சட்ட திருத்தம் ஒன்றை நிறைவேற்றி உள்ளது. அதன்படி, எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கும்போது, கைது செய்யப்படும் மீனவர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.17.50 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் அந்த சட்டத்தில் ஷரத்துக்களை கொண்டு வந்துள்ளது.
இதற்கு தமிழக மீனவர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுகுறித்து தமிழக அரசியல் கட்சியினர் இலங்கை அரசுக்கும், மத்திய அரசுக்கும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
தமிழக முதல்வர் இந்த சட்டம் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக மீனவர்கள் பிரச்சனையில் இலங்கையை போல இந்தியா நடந்து கொள்ளாது என்று கூறினார்.
மேலும் மனிதாபிமான அடிப்படியில் மட்டுமே மீனவர்களின் பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணமுடியும் என்று என்று அவர் தெரிவித்துள்ளார்.