கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்து – இங்கிலாந்து இடையேயான 2வது தொடர் நடைபெற்று வந்தது. இந்த போட்டி டிராவில் முடிந்தது.
இங்கிலாந்து அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அங்கு இரு அணிகளுக்கு இடையே 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது.
ஏற்கனவே முதல் டெஸ் போட்டியில், முதல் தொடரை நியூசிலாந்து கைப்பற்றி உள்ள நிலையில், 2வது தொடர் டிராவில் முடிவடைந்தது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான நியூசிலாந்து வீரர் சோதியின் சிறப்பான பேட்டிங்கால், போட்டி டிராவில் முடிந்தது. எனவே, நியூசிலாந்து 1 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது.
நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் இடையிலான. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 307 ரன்களும், நியூசிலாந்து 278 ரன்களும் எடுந்திருந்தது.
29 ரன்கள் முன்னிலையில் ஆடிய இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 352 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.
இதன் காரணமாக நியூசிலாந்து வெற்றிக்கு 382 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன் எடுத்து இருந்தது.
இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. வெற்றிக்கு மேலும் 340 ரன் தேவை என்ற நிலையில், நியூசிலாந்து தொடர்ந்து விளையாடியது.
ஆனால், இங்கிலாந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல், விக்கெட்டுகள் சரசரவென சரிந்தன. இதன் காரணமாக 219 ரன்னில் 7 விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரர் லாதம் 83 ரன்னும், கிராண்ட் ஹோம் 45 ரன்னும் எடுத்திருந்தனர்.
இந்நிலையில் முன்னணி வீரர்கள் அனைவரும் வெளியேறிய நிலையில், சோதி மட்டும் தொடர்ந்து நிதானமாக ஆடி வந்தார். அவரை வீழ்த்த நினைத்த இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கடுமையாக முயன்றும், அவர்களின் பந்துகளை அனாயசமாக அடித்து விரட்டினார்.
5-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்தது.
இதனால் போட்டி டிராவில் முடிந்தது. சோதி 168 பந்துகளை சந்தித்து 56 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்ட மிழக்காமல் இருந்தார்.
இங்கிலாந்து அணி தரப்பில் பிராட், மார்க்வுட், ஜேக் லிச் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றதால், தொடரை 1-0 என கைப்பற்றியது.
கடைசி போட்டியின் ஆட்டநாயகனாக டிம் சவுத்தி தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருதை டிரென்ட் போல்ட் தட்டிச் சென்றார்