டில்லி:
மும்பை உட்பட மராட்டிய மாநிலம் முழுவதும் பற்றிப் படர்ந்துள்ள கலவரத்திற்கு பின்னில் ஆர் எஸ்எஸ் உள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இன்று பாராளுமன்றத்தில், மகாராஷ்டிர மாநில கலவரம் குறித்து சபையில் விவாதம் மேற்கொள்ள வேண்டுமென்று எதிர்கட்சிகள் குரல் எழுப்பியதால் சபை பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூ கார்கே இன்று பாராளுமன்றத்தில் பேசியபோது, “சமுதாயத்தை சாதிய அடிப்படையில் பிளவுபடுத்தும் வேலையையே ஆர் எஸ்எஸ் மேற்கொள்கிறது.
“கலவரம் குறித்து மௌனம் சாதிக்கும் பிரதமர் மோடி, மௌனி பாபாவாக இருக்கிறார். தீவிர இந்துத்வ வாதங்களை முன் வைக்கும் ஆர் எஸ்எஸ்ஸே இந்தியாவை சாதிய அடிப்படையில் பிளவுபடுத்தும் வேலையை செய்து வருகிறது. மராட்டியத்தில் கலவரத்திற்குக் காரணமாக இருந்தது ஆர் எஸ்எஸ் பிரமுகரே.
பாஜக அதிகாரத்திலுள்ள இடங்களிலெல்லாம் இதுதான் நிலைமை. குஜராத், இராஜஸ்தான் உட்பட பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் பெரும் அநியாயங்கள் நிகழ்கின்றன. கலவரத்தை பற்றிய விசாரணையை உயர்நீதி மன்ற நீதிபதி தலைமையில் மேற்கொள்ள வேண்டும். பிரதமர் பாராளுமன்றத்திக்கு வந்து இது குறித்துப் பேச வேண்டும். இது போன்ற செயல்கள் நடைபெறும் போது பிரதமர் ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்” என்று குற்றம் சாட்டினரார்.