சமீபத்தில் வாலியண்டியராக வந்து, ராம்குமார் வழக்கில் ஆஜரானவர் வழக்கறிஞர் ஜி. கிருஷ்ணமூர்த்தி. “சுவாதியை ராம்குமார் கொலை செய்யவில்லை. தனது கழுத்தை ராம்குமார் அறுத்துக்கொள்ளவில்லை” என்றெல்லாம் சொல்லி, ராம்குமாருக்காக ஜாமீன் மனு தாக்கல் செய்து தமிழகத்தையே திரும்பிப்பார்க்க வைத்தவர். பிறகு, “இந்த கிருஷ்ண மூர்ததியை ராம்குமாருக்கு வக்கீலாக நாங்கள் நியமிக்கவே இல்லை” என்று ராம்குமாரின் குடும்பத்தினர் சொன்னது தனிக்கதை.
இவர் தனது முகநூல் பக்கத்தில் “பெண்கள் ஏன் கொல்லப்படுகிறார்கள்” என்று எழுதியிருக்கிறார்.
அந்த பதிவு:
“இப்போதெல்லாம் பெண்கள் முகநூலுக்கும் மற்ற மின்னனு தொடர்புகளுக்கும் அடிமையாகிவிட்டனர்.
தனிமை என்ற பேயை விரும்பி தேர்ந்தெடுக்கிறார்கள். அதை கொண்டாடுகிறார்கள்.
மூத்தவர்கள் பேச்சை கேட்பதில்லை.
விளைவு… கொலைகள்!”
- இப்படி தனது முகநூல் பக்கத்தில் சொல்லியிருக்கிறார் வழக்கறிஞர் ஜி. கிருஷ்ணமூர்த்தி.