சென்னை: வடக்கில் இருந்து வீசிய காற்றே, சென்னையில் ஏற்பட்ட காற்று மாசுக்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

தலைநகர் டெல்லி உள்ளிட்ட இந்தியாவை அலற வைத்த காற்று மாசு பிரச்னை இன்னும் தீர்ந்தபாடில்லை. மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்க, அதன் தாக்கம் தமிழகத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்து இருக்கிறது.

சென்னையில் சில நாட்களாக காற்றின் மாசு அதிகரித்து வருகிறது. மாநகர் முழுவதும் காற்றின் மாசால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். காற்றின் மாசோடு, பனியும் சேர்ந்து கொண்டிருப்பதால், தாக்கம் அதிகமாகி இருக்கிறது.

அதற்கான காரணம் என்ன என்பதும் தற்போது தெரிய வந்திருக்கிறது. வடக்கில் இருந்து வீசும் காற்று, சென்னையை நோக்கி வந்ததாலேயே காற்று மாசு ஏற்பட்டு இருக்கிறது. வடக்கில் இருந்து வீசிய காற்றால், அங்கிருக்கும் மாசுக்கள் சென்னையை தாக்கி மக்களை அவதிப்பட வைத்துள்ளது.

புல்புல் புயல், குறைந்த தாழ்வழுத்த பகுதி தென் இந்தியாவை நோக்கி நகர்ந்திருக்கிறது. அதாவது, பலத்த காற்றினால் கடும் பனியும், புகை மூட்டமும் படிப்படியாக நகர்ந்து தலைநகர் சென்னையை பாதித்திருக்கிறது.

கிழக்கு இந்தியாவை நோக்கி தள்ளப்பட்ட காற்றின் மாசு, ஒடிசா, ஆந்திரா வழியாக சென்னையை வந்தடைக்கிறது. அதனாலேயே காற்றின் மாசு அதிகரித்து இருக்கிறது.

இந்த காற்று, மேலும் 5 நாட்களாக இப்படியே தான் இருக்கும். அதுதவிர நக்ரி புயலின் தாக்கம், வங்காள விரிகுடாவின தென் மேற்கு திசையை நோக்கி பயணிக்கும். அதனால் சென்னைக்கு இனி மழை வாய்ப்பு அதிகம். அதன்பிறகு காற்றின் தரம் மேம்படும்.